DMK- congress alliance: ஸ்டாலினை சந்திப்பதற்கு முன்! ப.சிதம்பரத்துடன் செல்வப்பெருந்தகை திடீர் ஆலோசனை
சென்னை: முதல்வர் ஸ்டாலினை சற்று நேரத்தில் சந்திக்கவுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி இழுபறியில் இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலினை, இன்னும் சற்று நேரத்தில் ப.சிதம்பரம் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

அவர் முதல்வரை சந்திக்க புறப்படும் முன்பு ப.சிதம்பரத்தின் நுங்கம்பாக்கம் வீட்டில் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி வருகிறார். வரும் சட்டசபை தேர்தலில் திமுக 25 தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை சீட்டையும் தர முன்வந்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ 39 தொகுதிகளும் 2 ராஜ்யசபா சீட்டும் கேட்டு வருகிறது. இதனால் முதல்கட்டமாக நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தோல்வியே ஏற்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவையில் போட்டியிட திமுகவுக்கு 4 இடங்கள் கிடைத்துள்ளன.
இதில் திமுக இரு இடங்களிலும் காங்கிரஸ், தேமுதிகவுக்கு ஒரு இடங்களும் கொடுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. மார்ச் 15 ஆம் தேதி நடக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கு நாளை மறுநாளுடன் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி முடிகிறது.
இதனால் இன்றைக்குள் திமுகவுடன் கூட்டணியை தொடர்வதா வெளியேறுவதா என்பதை அறிவிக்க இன்றுடன் கெடு விதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்,தவெகவை புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் திமுக தரும் 25 தொகுதிகளை பெறக் கூடாது என்பதிலும் அவர் திட்டவட்டமாக இருக்கிறாராம். இந்த நிலையில்தான் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளார்.
அவரை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்கு முன்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு செல்வப்பெருந்தகை வருகை தந்துள்ளார். அங்கு அவருடன் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் பலருக்கு தவெகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் இருந்தாலும் சோனியா காந்திக்கு திமுகவுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி தொடருமா இல்லை முறியுமா என்பது இன்று அல்லது நாளை தெரிந்து விடும் என்கிறார்கள்.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications