ஜுன் 4ல் கமலாயத்தில் இருப்பீங்களா? கிண்டல் செய்த அண்ணாமலைக்கு, செல்வபெருந்தகை பதிலடி
சென்னை: தமிழர்களை பிரதமர் மோடி திருடர்கள் எனக்கூறியதாக தெரிவித்து தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்த காங்கிரஸை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்தார். தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் என அவர் தெரிவித்த நிலையில் அண்ணாமலைக்கு, காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
ஒடிசாவில் பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்கு நவீன் பட் நாயக் முதல்வராக உள்ளார். அங்கு லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஆகியவை ஒன்றாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 13ம் தேதி அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. 115 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.

மாறாக லோக்சபா தேர்தல் என்பது 4 கட்டங்களாக நடந்து வருகிறது. மொத்தம் 21 தொகுதிகள் உள்ள நிலையில் கடந்த 13ம் தேதி 4 தொகுதி, கடந்த 20ம் தேதி 5 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. மீதமுள்ள 12 தொகுதிகளில் தலா 6 தொகுதிகள் என 2 ஆக பிரித்து மே 25 மற்றும் ஜுன் 1ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் ஒடிசா மாநிலத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போய்விட்டது. நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகன்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகநாதர் கோவில் பொக்கிஷ் அறை சாவியே காணாமல் போய்விட்டது. அந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்'' என தெரிவித்து இருந்தார்.
ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து தற்போது பிஜு ஜனதா தளம் கட்சியில் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் செயல்பட்டு வரும் மதுரையைச் சேர்ந்த விகே பாண்டியனின் பெயரை தான் பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக விமர்சனம் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழர்களை திருடர்கள் என பொருள்படும்படி பிரதமர் மோடி பேசிவிட்டதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கொந்தளித்து வருகின்றன.
இந்நிலையில் தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை, ‛‛இனிவரும் காலங்களில் தமிழர்களை அவமானப்படுத்தினாலோ, தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி பேசினாலோ, பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டு மக்களிடம் மோடியும், அமித்ஷாவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால், தமிழகத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம்'' என தெரிவித்து இருந்தார்.
இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம்.
எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம். எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் அண்ணாமலையின் இந்த பதிவுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‛‛ ஒடிசா மாநிலம் புரி ஸ்ரீகெஜந்நாதர் ஆலய கருவூலத்தின் சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களையும் திருடர்கள் என்று இழிவுபடுத்தும் செயலாகும். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சால் ஒட்டுமொத்த தமிழர்களும் அவருக்கு எதிராக கடும் கோபத்தில், கொந்தளிப்பில் உள்ளனர்.
மோடியின் தமிழர் விரோதப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தேன். ஜனநாயகத்தின் மீது முற்றிலும் நம்பிக்கை இல்லாத கட்சியான பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் இந்தப் போராட்ட அறிவிப்பை கிண்டலடித்திருக்கிறார். முற்றுகைப் போராட்டத்திற்கு வரும் 10 பேருக்கு உணவு தயார் செய்து வைப்பதாக கூறியிருக்கிறார்.
வரும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை. ஏனெனில், கடந்த 2004ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை இழந்த பிறகு 2014 வரை கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு அந்த அலுவலகத்தில் அப்போது மாநில அமைப்பு பொதுச் செயலாளராக இருந்த மோகன்ராஜுலு மட்டுமே இருந்தார். இந்த வரலாற்றை எல்லாம் அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உணவு ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம். அதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழ்நாடு எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது பற்றியும், மோடி ஆட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் பற்றியும் புத்தகம் வழங்கத் தயாராக இருக்கிறோம்.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications