தவெகவுடன் கூட்டணி வைத்தது தவறு! இப்ப அவமானப்பட்டு நிற்கிறோம்! செல்வப்பெருந்தகை வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சிக்கு ஆதரவு என்ற முடிவு தற்போது தவறாகி அவமானப்பட்டு நிற்கிறோம் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாமல் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து ஒரு சில சீட்களில் போட்டியிட்டு ஒற்றை இலக்கத்தில் எம்எல்ஏக்களை பெற்ற காலம்தான் இருந்து வந்தது.

congress

இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி சுருங்கி தற்போது இரு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியை அமைத்து வருகிறது. இதனால் ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்துவது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

கடந்த 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும் காங்கிரஸ் கட்சியால் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெற முடியவில்லை.

இந்த நிலையில்தான் விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் இலக்கு என சொல்லிவிட்டது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. இந்த நிலையில்தான் சட்டசபை தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் விருப்பமாக இருந்தது.

ஆனால் சோனியா காந்தி உள்ளிட்டோர்தான் திமுகவை விட்டு விலகக் கூடாது என்பதில் மும்முரமாக இருந்தார்களாம். திமுகவும் தங்களை விட்டால் காங்கிரஸுக்கு வேறு நாதி இல்லை என கருதி சீட்களை குறைத்து பேரம் பேசியது. இதையடுத்து ஒருவழியாக ப.சிதம்பரத்தின் தலையீட்டால் திமுகவுக்கும் இல்லாமல் காங்கிரஸுக்கும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் காங்கிரஸ் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வென்றது.

இதையடுத்து தவெக 108 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை இல்லாத நிலையில் விஜய் ஏற்கெனவே அறிவித்திருந்த ஆட்சியில் பங்கு என்பதற்கு ஆசைப்பட்டு காங்கிரஸ் கட்சி, திமுகவை அம்போவென விட்டுவிட்டு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது.

ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக திமுக கூட்டணியில் இருந்த விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன. அது போல் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வெற்றிக்கு நன்றியை தெரிவித்துவிட்டு வந்தன.

ஆனால் காங்கிரஸ், அறிவாலயம் பக்கமே செல்லாமல் அப்படியே தவெக பக்கம் வந்துவிட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சால் தவெக- காங்கிரஸ் இடையே கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என தவெகவினர் கூறி வருகிறார்கள். அதற்கேற்ப வடமாநிலங்களில் விஜய்யை பாராட்டி இன்ப்ளூயன்ஸர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், முதல்வர் நாற்காலியில் விஜய்யின் கையை பிடித்து ராகுல் காந்தி உட்கார வைத்தது போல் பிரதமர் நாற்காலியிலும் உட்கார வைப்பார் என தெரிவித்திருந்தார். இது பெரும் புயலை கிளப்பியுள்ளது.

விஜய்யை வைத்து பிரதமராகிவிடலாம் என ராகுல் கணக்கு போட்டியிருக்கும் நிலையில் அது தப்பு கணக்கு என்பதை போல் தவெகவினர் பேசுவது காங்கிரஸுக்கு கோபத்தை கொடுத்துள்ளது.

விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற தவெகவினரின் கூற்றை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மறுத்துள்ளார். ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என கூறியுள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, ஒரு நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் தவெக ஆட்சிக்கு ஆதரவு என்ற முடிவை ராகுல் எடுத்தார், அவர் எடுத்தார் , இவர் எடுத்தார் என்பதெல்லாம் நான் சொல்ல வரவில்லை.

"என்னை பிரதமராக்க வேண்டும்" என ராகுலே நேராக வந்து கேட்பாரா, ஆக ஏதோவொரு கணக்கில் நாங்கள் எடுத்த முடிவு தவறாகி அவமானப்பட்டு நிற்கிறோம் என தெரிவித்துள்ளார். ஆக திமுகவுடன் கூட்டணியில் இருந்து வெளியே வந்து தவெகவுக்கு ஆதரவு அளித்தது தவறு என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கிறது என்பதாகவே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+