MK Stalin: காங்கிரஸுக்காக உழைத்த ஸ்டாலினுக்கு நாங்கள் விசுவாசமாக இல்லையே! செல்வப்பெருந்தகை வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைத்தார், ஆனால் நாங்கள் அவருக்கு விசுவாசமாக இல்லையோ என்ற வருத்தம் இப்போதும் எனக்கு உள்ளது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே, அதாவது 21 ஆண்டுகளாக அதில் 2013 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளை தவிர்த்து திமுகவும் காங்கிரஸும் கூட்டணியில் இருந்து வந்தன.

mk stalin selvaperunthagai

இத்தனை நாள் வரை திமுகவை விட்டு காங்கிரஸ் விலகிச் செல்லாது என்பதாகவே இருந்தது. ஆனால் தவெக எப்போது குறுக்கே வந்ததோ எல்லாமே தலைகீழ்!

கடந்த 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட 40 -க்கு மேற்பட்ட சீட்களை திமுகவிடம் இருந்து காங்கிரஸ் எதிர்பார்த்தது, ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினோ காங்கிரஸ் கட்சியை வைத்து பார்த்து சமாதானப்படுத்திக் கொண்டே வந்தார்.

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தேவையில்லாத சுமை என்றெல்லாம் திமுக நிர்வாகிகள் பேசிய போது கூட ஸ்டாலின் பொறுமை காத்தார். இதனாலேயே திமுகவை விட்டு வெளியே வர காங்கிரஸில் பலருக்கு விருப்பம் இல்லை.

இப்படியே பேசி பேசி காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களை திமுக ஒதுக்கியது. பல மாநிலங்களில் இல்லாத காங்கிரஸுக்கு 28 இடங்களா என பலரும் விமர்சித்தனர். ஆனால் ஸ்டாலினோ தனது தந்தைக்கு காங்கிரஸுடனான நட்பை மதித்து அவர்களுக்கு சீட்டை ஒதுக்கினார்.

ஆட்சியில் பங்கு தருகிறோம் என தவெக அறிவித்ததும் அந்த கூட்டணிக்கு செல்லவே காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோருக்கு இருந்தது. எனினும் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றது.

அப்போது தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை தங்களுக்கு சாதகமாக்க முயன்ற காங்கிரஸ், திமுகவிடம் சொல்லாமல் கொள்ளாமல் தவெக பக்கம் தாவி 2 அமைச்சரவை பதவிகளை பெற்றது. 2026 தேர்தலில் ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை திமுகவிடம் இருந்து, சி.வி.சண்முகம் ராஜினாமா ஏற்பட்ட காலி இடத்தில் இன்னொரு எம்பி பதவியை தவெகவிடமும் கேட்டு காங்கிரஸ் சாதித்துக் கொண்டது.

பொதுவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திமுகவுக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். அக்கட்சி தலைமையுடன் நட்புறவும் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் செல்வப்பெருந்தகை தேர்தலுக்கு முன்பே அறிவித்தது போல் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் செல்வப்பெருந்தகை கூறுகையில், தவறான கணக்கு போட்டு தவெகவுடன் இணைந்து தற்போது அவமானப்பட்டு நிற்கிறோம் என தெரிவித்திருந்தார். அதிலிருந்தே அவருக்கு திமுகவுடன் கூட்டணி என்பதை பிரிய மனமில்லை என்பது தெரிகிறது.

அது போல் தற்போது இன்னொரு சேனலுக்கு அளித்த பேட்டியில் செல்வப்பெருந்தகை, " ஸ்டாலின் அர்ப்பணிப்புடன் செய்த பணியை காங்கிரஸ் கட்சி செய்ய தவறிவிட்டதோ என்ற வேதனை எனக்குள் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்காக ஸ்டாலின் கடுமையாக உழைத்தார், ஆனால் அவருக்கு நாங்கள் விசுவாசமாக இல்லையோ என்ற வருத்தம் இப்போதும் எங்களுக்கு இருக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்ற போது கூட செல்வப்பெருந்தகை பெரிய அளவில் எந்த விருப்பு வெறுப்பையும் காட்டிக் கொள்ளவில்லை. சைலண்ட்டாகவே இருந்து வந்த அவர் தற்போது திமுகவுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+