Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்வப்பெருந்தகை தூக்கப்படுகிறாரா? ராகுலுக்கு போன "ரகசிய ஆதாரம்" அடுத்ததாக அந்த கட்சியில் இணைகிறாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்வப்பெருந்தகையின் ராஜினாமா அறிவிப்புக்கு பின்னால் இருக்கும் டெல்லி மேலிடத்தின் அதிரடி உத்தரவும், ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட ரகசிய ரிப்போர்ட்டும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவி பறிக்கப்படும் சூழலில் அவர் எடுத்திருக்கும் இந்த அடுத்தகட்ட முடிவு, தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் ஒரு பெரிய அரசியல் பூகம்பத்தையே கிளப்பியுள்ளது. இதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

"தேர்தல் முடிந்ததும் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய போகிறேன்" என ராகுல் காந்தியிடம் தெரிவித்து விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியிருக்கிறார்.

Selvaperunthagai Rahul Gandhi Tamil Nadu Congress Corruption Allegations Seat Allocation ScamTamil Nadu Elections 2026 Tamil Nadu Assembly Electiopn 2026 2026

இதுகுறித்து ராகுல்காந்திக்கு நெருக்கமான தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களிடம் நாம் விசாரித்தோம்.. நம்மிடம் அவர்கள் பேசியபோது, "செல்வப்பெருந்தகை சொல்வது பொய். காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை கேட்டு பெறுவதிலும், தொகுதிகளை வாங்கியதிலும், வேட்பாளர்களை சிபாரிசு செய்ததிலும் மிக பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது.. அதில் புழங்கிய பண விளையாட்டுகள் ராகுலிடம் தெரிவிக்கப்பட்டது.

செல்வப்பெருந்தகை - ராகுல் காந்தி

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராகுல் காந்தி, அதனை விசாரிக்க கே.சி.வேணுகோபாலிடம் சொல்லி உள்ளார்.. அப்போதுதான் தொகுதிகள் பெறப்பட்டதிலிருந்தே ஊழல் நடந்திருக்கிறது என்பதும், சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்டது.

உடனே கே.சி.வேணுகோபால். அது தொடர்பான ரிப்போட்டை ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த ரிப்போர்ட்டை பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்த ராகுல்,"செல்வப் பெருந்தகையிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்குங்க... உடனே அவரை பதவியிலிருந்தும் நீக்குங்கள்" என கே.சி.வேணுகோபாலிடம் ராகுல் காந்தி சொன்னாராம்.

அதற்கு வேணுகோபால், "வேண்டாம். இப்போது நீக்கினால் தேவையற்ற விமர்சனங்கள் வரும். நீக்குவதற்கு கார்கேவே கூட இதை எதிர்ப்பார். அதனால் தேர்தல் முடியட்டும்" என்றாராம்.. இதற்கு பிறகே அமைதியாகியிருக்கிறார் ராகுல்காந்தி.

ராஜினாமா கடிதம்

இதன்பின்னர் செல்வப் பெருந்தகையை வரவழைத்து தனது ஒட்டுமொத்த கோபத்தையும் அவர் மீது கொட்டிய கே.சி.வேணுகோபால், ரிசைனிங் லெட்டரையும் அவரிடம் எழுதி வாங்கியிருக்கிறார்..

ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு வந்த செல்வப் பெருந்தகை, இதைப்பற்றி மல்லிகார்ஜூன காக்கேவிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.. எனினும், அனைத்தையும் மறைத்து விட்டு, தேர்தல் முடிந்ததும் தான் பதவி விலகுவதாக கூறி சீன் போடுகிறார்.. எப்படியும் தேர்தல் ரிசல்ட் வந்ததும் அவர் நீக்கப்படுவது உறுதி " என்று நம்மிடம் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, சீட் விவகாரத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட பலர், தங்களிடமிருக்கும் ஆதார தகவல்களை ரிப்போர்ட்டாக ராகுலுக்கு அனுப்பி வைத்துள்ளனராம்.


திமுகவுடன் பேச்சுவார்த்தை

இது மட்டுமல்லாமல், திமுகவுடன் பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்தபோது, பெங்களுர் சென்று கார்கேவை சந்தித்தார் செல்வப்பெருந்தகை. அப்போது, நடந்துள்ள சில பேரங்கள் தொடர்பான தகவல்களும் எம்பிக்களால் தற்போது ராகுலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தேர்தல் ரிசல்ட் ரிலீஸ் ஆனதும், செல்வப் பெருந்தகைக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவைப் பொறுத்து, முக்கிய கட்சியில் இணைவதற்கு திட்டமிட்டுள்ளாராம் செல்வப்பெருந்தகை. குறிப்பாக, திமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அக்கட்சியில் சேரும் யோசனையில் இருக்கிறாராம்.. அடுத்து என்ன நடக்க போகிறதோ தெரிய வில்லை? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

- எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+