"கேம்" ஸ்டார்ட்.. புட்டு புட்டு வைத்த செல்வப்பெருந்தகை.. டக்கென கமெண்ட் அடித்த தமிழக பாஜக.. செஸ் பரபர
செல்வப்பெருந்தகை அறிக்கைக்கு நாராயணன் திருப்பதி பதிலடி தந்துள்ளார்
சென்னை: பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளைப் புறக்கணிப்பு செய்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது... இதனை தமிழக பாஜக கிண்டல் செய்துள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடக்கும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.. பல கட்சி தலைவர்களும், டெல்லி தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.
ஆனால் இது தொடர்பான, பிரதமரை வரவேற்பது தொடர்பாக, தமிழக அரசின் செயல்பாடுகளால் பாஜக அப்செட்டில் உள்ளது.. இதை கண்டித்தும் உள்ளது.. "தமிழக அரசு விளம்பரங்களில், பிரதமரின் படம் இடம்பெறவில்லை.. இது திமுக அரசின் மலிவான, தரம் தாழ்ந்த, வக்கிர மற்றும் குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.. உலகமே போற்றும் பிரதமர் மோடிக்கு விளம்பரம் தேவையில்லை.. ஆனால், பொறுப்புள்ள முதல்வருக்கு, சர்வதேச அளவில் நடக்கும் விழாவில், பிரதமருக்கு மரியாதை தர வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லையே என்பது மக்களின் கருத்தாக உள்ளது.. இதுதான் திராவிட மாடலோ என்று, நாராயணன் திருப்பதி கண்டித்து கூறியிருந்தார்.

செல்வப்பெருந்தகை
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாகக் காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை சில காரணங்களை அடுக்கி உள்ளார்.. அதில், "விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பாதுகாப்பு அச்சுறுத்தல், ஆபத்தான அக்னிபத் திட்டம், கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது, தன்னாட்சி பெற்ற அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவது, தமிழகம் ஏற்காத நீட்தேட்வை திணிப்பது, தமிழக ஆளுநரை தமிழர் நலனுக்கு எதிராகப் பேச வைப்பது, தமிழக சட்ட மன்ற மசோதாக்களுக்கு அங்கீகாரம் வழங்காமல் இருப்பது என நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன.

லிஸ்ட் பாஜக
மக்களவையிலும், மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தால் ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான வகையில் அவர்களை சஸ்பெண்ட் செய்வது போன்ற மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு துணை போகின்றது ஒன்றிய அரசு.. ஜனநாயகத்திற்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் வகையிலும் செயல்படும் பாசிச பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.

துணிச்சல்
இந்த புறக்கணிப்பு ஜனநாயகத்திற்கு விரோதமான அரசை நடத்தும் பிரதமர் மோடிக்கு எதிரானதுதானே தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிராக அல்ல" என்றும் செல்வப்பெருந்தகை தன்னுடைய அறிக்கையில் தெளிவுபடுத்தி உள்ளார்.. மேலும், தன்னுடைய இதே அறிக்கையில் தமிழகம் இந்தப் போட்டியை எடுத்து நடத்திட விரும்புகிறது என்று துணிச்சலாக முடிவெடுத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

ஸ்பெஷல் பாராட்டு
வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவு முதல் தங்குமிடம் வரை அனைத்து விஷயங்களையும் நேரடியாக கண்காணித்து உரிய உத்தரவுகளை அதிகாரிகளுக்கு வழங்கி வருவதுடன், அரங்கத்திற்கு நேரிலேயே சென்று ஆலோசனைகள் வழங்கியிருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்றும் தமிழக முதல்வருக்கு பிரத்யேக பாராட்டையும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

நாராயணன் திருப்பதி
மத்திய அரசை லிஸ்ட் போட்டு பாராட்டியதுமே, தமிழக பாஜக கொந்தளித்துள்ளது.. நிகழ்ச்சியை புறக்கணிப்பு செய்யப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளதற்கு, கிண்டல் செய்து ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநில துணை தலைவருமான நாராயணன் திருப்பதி.. அந்த ட்வீட்டில், "சரி தான். இது அறிவு பூர்வமான விளையாட்டு. ஆகவே, செஸ் போட்டியை புறக்கணிப்பது சரியான முடிவே" என்று சீண்டி ட்வீட் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
|
கிராண்ட் மாஸ்டர்
இதற்கு பல கமெண்ட்கள் பதிவாகி கொண்டே இருக்கின்றன.. "அப்படின்னா, கிராண்ட் மாஸ்டர்களில் மொத்தமும் வடமாநில ஆட்கள்தான் கலந்து கொள்வார்களா? இந்தியாவிலே எந்த மாநிலமும் முன் வரவில்லை.. தமிழகம் வந்து போட்டியை எவ்வளவு சிறப்பாக நடத்தி வருகிறது.. இதை எல்லாம் மதவாதிகள் ஆட்சி மாநிலங்களில் நடத்தி கலவரம் தான் நடந்திருக்கும்.. இதை போய் குறை சொல்லலாமா? என்றும் பதில் கேள்வி கேட்டு கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications