"என்னை காப்பாற்றுங்கள்" மனைவி செய்த ஒரு சம்பவம்.. வீடியோ வெளியிட்ட செல்வராகவன்!
சென்னை: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவன், என்னை காப்பாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ள வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, "நீதானே புன்னகை மன்னன்" என்ற பாடலை பாடிக் கொண்டிருந்த, செல்வராகவன் அதற்கு ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என்று ஏராளமான முக்கிய படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது செல்வராகவன் நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

பீஸ்ட், ராயன், சாணிக் காகிதம் உள்ளிட்ட படங்களில் செல்வராகவனின் நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அண்மையில் செல்வராகவன் நடிப்பில் வெளியான ஆர்யன் திரைப்படமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. செல்வராகவன் மற்ற சினிமா நடிகர்களை போல் படத்தின் புரமோஷனுக்கு மட்டுமல்லாமல், சோசியல் மீடியாவில் பல்வேறு விஷயங்களையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வார்.
அந்த வகையில் இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவன் என்னை காப்பாற்றுங்கள் என்று வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, ஏதே எண்ணம் வருதே.. என் கையில் எண்ணம் தருதே.. நீதானே புன்னகை மன்னன்.. எந்நாளும் தந்தனை அண்ணன் என்று பாடிக் கொண்டிருக்கிறார்.
அந்த பாடலின் பாடல் வரிகளை கீதாஞ்சலி செல்வராகனd தனது இஷ்டத்திற்கு மாற்றி பாடுவது ட்ரெண்டாகி இருக்கிறது. அந்த பாடலை கேட்கும் செல்வராகவன், ஒவ்வொரு தவறின் போதும் ஒவ்வொரு ரியாக்ஷன் கொடுத்துள்ளார். அந்த வீடியோவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் யாராலும் உங்களை காப்பாற்ற முடியாது என்று கமெண்ட் செய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications