‛‛இனி ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்’’.. தேதி அறிவித்த கல்லூரி இயக்குநர்! மாணவர்களே நோட் பண்ணுங்க
சென்னை: வரும் கல்வியாண்டில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் ஜுலை 3ம் தேதி முதலாமாண்டு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு துணைவேந்தர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது கல்லூரி, பல்கலைக்கழங்களில் வெவ்வேறு தேதிகளில் தேர்வுகள் நடத்தி வெவ்வேறு தேதிகளில் ரிசல்ட் வெளியிடுவது மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சில கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தாமதமாக தேர்வுகள் நடத்தி முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட கல்லூரியில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் என்பது முடிந்து விடுகிறது என கவலை தெரிவித்தார்.
மேலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடத்தி ஒரே நேரத்தில் முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுவதற்கான அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து கலை, அறிவியல் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதோடு அதில் உள்ள உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் உள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான வகுப்புகள் ஜுலை 3ம் தேதி தொடங்க உள்ளன.
இந்த கல்வியாண்டு முதல் செமஸ்டர் தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தி ஒரே நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும். அதன்படி இந்த கல்வியாண்டின் முதல் செமஸ்டர் தேர்வுகளை வரும் அக்டோபர் 31ல் தொடங்கி நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்பிறகு டிசம்பர் 16ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
அதன்பிறகு அடுத்த செமஸ்டர் தேர்வுகளை 2025 ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி மே 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளை 2025 மே 31ம் தேதிக்குள் வேண்டும். இதனை அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாக மீண்டும் ஒருமுறை தேர்வு தேதி உறுதி செய்து அறிவிப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications