Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கோட்டையன் நிலைமையை பாருங்க.. ஆசையாக போட்ட போஸ்ட்.. உடனே டெலிட்! ஆனந்த் கலாட்டா காரணம்? ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் முதன் முதலாக ஒரு வாழ்த்து செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்த நிலையில், புஸ்ஸி ஆனந்தின் படம் சிறிதாக இருந்தது. ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படமே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென அந்த பதிவை நீக்கிய செங்கோட்டையன், மீண்டும் அதே போட்டோவை பதிவிட்டிருக்கிறார்.

அதிமுகவில் இருந்த அமைச்சர்களின் மிக மூத்தவர் செங்கோட்டையன். அடிப்படையில் திமுக தொண்டராக இருந்தவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் கட்சியை ஒருங்கிணைத்தது செங்கோட்டையனுக்கு முக்கிய பங்கு உண்டு.

அதனால் தான் எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்ற போது எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செங்கோட்டையன் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக மாறியவர். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

Sengottaiyan TVK vijay

செங்கோட்டையன்

தற்போதைய சூழலில் சட்டமன்றத்திலும் மூத்தவர்களில் ஒருவர் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்ற நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையேயும் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி உடன் செயல்பட்டார். அதற்கு அடுத்து நடந்த நிகழ்வுகளில் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையன் இடையே மோதல் வெடித்தது.

எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்திய செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார் எடப்பாடி. செங்கோட்டையனை திமுகவில் இணைய வைக்க கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், சென்னையைச் சேர்ந்த ஒரு அமைச்சரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

விஜய்

அவரை பொன்னாடை போர்த்தி வரவேற்ற விஜய், அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கொங்கு மண்டல அமைப்பாளர் பதவியும் வழங்கினார் தொடர்ந்து அதிமுகவின் கூட்டங்கள் விஜயின் பிரச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பொறுப்பும் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எம்ஜிஆரின் தீவிர விசுவாசியான செங்கோட்டையன் அவரது கையில் அதிமுக கொடியை பச்சை குத்தி இருக்கிறார். அந்த அளவுக்கு அதிமுக மீது பற்று கொண்ட செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்திற்கு சென்ற போது சட்டை பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் சென்றார்.

ஜெயலலிதா படம்

தொடர்ந்து கட்சியில் சேர்ந்த பிறகு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா புகைப்படங்களுடன் பேனர் வைத்திருந்தார். இந்த நிலையில் செங்கோட்டையன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு பதிவை திடீரென நீக்கி இருக்கிறார். தவெக கட்சியில் சேர்ந்த பிறகு எந்த விதமான எக்ஸ் பக்கத்தில் எந்தவிதமான பதிவையும் வெளியிடாத செங்கோட்டையன் முதன் முறையாக நேற்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வாழ்த்து பதிவிட்டிருந்தார்.

பதிவு நீக்கம்

அந்த புகைப்படத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்கள் புகைப்படம், விஜயுடன் செங்கோட்டையன் இருப்பது போன்ற புகைப்படமும் இடம் பெற்று இருந்தது. ஒரு மூலையில் எம்ஜிஆர் ஜெயலலிதா புகைப்படங்களும் அதற்கு கீழ் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் படமும் இருந்தது. இந்த நிலையில் அந்த படத்தை தான் திடீரென நீக்கி இருக்கிறார் செங்கோட்டையன். கட்சியில் சேர்ந்த பிறகு முதன் முதலாக வெளியிட்ட பதிவை அவர் நீக்க என்ன காரணம் என சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை பார்க்க முடிந்தது.

மீண்டும் பதிவிட்ட செங்கோட்டையன்

ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்ற ஜெயலலிதாவின் புகைப்படத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்துடன் வெளியிட்டதால் தலைமை கண்டித்ததாகவும், அதனால்தான் செங்கோட்டையில் படத்தை நீக்கிவிட்டதாக சொல்கின்றனர். மற்றொருபுறம் புஸ்ஸி ஆனந்தின் புகைப்படம் சிறிதாக இருந்ததாலும், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறாததால் செங்கோட்டையன் படத்தை நீக்கி விட்டதாக பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன. ஆனால் உண்மை இதுதான் என்று யாருக்கும் தெரியவில்லை.. செங்கோட்டையனும் விளக்கவில்லை. இந்நிலையில் டெலீட் செய்யப்பட்ட அதே படத்தை மீண்டும் பதிவிட்டுள்ளார் செங்கோட்டையன், இது குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+