செங்கோட்டையன் பின்னணியில் பாஜக? விஜய் கவனமாக இருக்கணும்.. திருமாவளவன் கொடுத்த வார்னிங்!
சென்னை: நண்பர் விஜய் பாஜகவிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே தவெகவில் சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஊடுருவி இருக்கும் சூழலில், செங்கோட்டையனின் இந்த முடிவுக்கு பின்னணியில் சூழ்ச்சி இருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், நாளை தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்று தலைமைச் செயலகம் வந்த செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பேசிவந்த செங்கோட்டையன், திடீரென இந்த முடிவை எடுப்பதற்கு பாஜகவே காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஏனென்றால் கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷா ஆகியோரை தொடர்ச்சியாக சந்தித்து வந்தார். இதனால் பாஜகவின் ஆலோசனைப்படி தவெகவில் இணையும் முடிவை செங்கோட்டையன் எடுத்தாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பாஜக தலைமை தன்னிடம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசியதாகவும் செங்கோட்டையனே சில நாட்களுக்கு முன் ஒப்புக் கொண்டார். தற்போது 77 வயதாகும் செங்கோட்டையன் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தவெகவில் இணைவது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் அரசியலமைப்பு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், செங்கோட்டையன் தவெகவில் இணையவிருக்கும் தகவல் எந்த அளவிற்கு உறுதியானது என்று தெரியவில்லை. அவர் இந்த முடிவை தன்னிச்சையாக எடுத்திருக்கிறாரா அல்லது பின்னணியில் ஏதும் சூது, சூழ்ச்சி இருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நண்பர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தவெகவில் பாஜக மற்றும் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஊடுருவல் நிகழ்ந்தால், அவருடைய அரசியல் கேள்விக்குறியாக மாறும். அதேபோல் கரூர் சம்பவத்திற்கு பின் எந்த அரசியல் கட்சியும் ரோடு ஷோ போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்பதே விசிகவின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.
-
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
Perambur Power Cut: பவர் இல்லை சிஎம்! பெரம்பூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்த மக்கள் -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்!












Click it and Unblock the Notifications