அதிமுகவின் அடையாளத்தை குறி வைத்த தவெக.. முதல்முறையாக அண்ணா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரையும் தமிழக வெற்றிக் கழகம் பங்கு போட முயற்சித்து வருகிறது. தவெகவில் செங்கோட்டையன் இணைந்துள்ள நிலையில், தற்போது அண்ணா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்களில் தவெக நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த இரு புகைப்படங்களையும் தவெக தொடர்ந்து பயன்படுத்தி வரும் சூழலில், முதல்முறையாக அவர்களின் நினைவிடங்களுக்கு வந்து மரியாதை செலுத்தி இருக்கின்றனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், மாலையில் விஜய்யுடன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தி இருந்தார். இதன்பின் இன்று காலை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வந்த செங்கோட்டையன், முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

Sengottaiyan joins TVK

இதன்பிம் விஜய் முன்னிலையில் அனைவரும் தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து செங்கோட்டையனின் வருகை தவெகவிற்கு உறுதுணையாக இருக்கும் என்று விஜய் வீடியோ வெளியிட்டார். தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்டோர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தி இருக்கின்றனர். அவர்களோடு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்ட பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஏற்கனவே மதுரை மாநாட்டில் 1967 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளை போல் 2026ஆம் ஆண்டு வரலாறு திரும்புகிறது என்று தவெக பேசி வந்தது. அதேபோல் கொள்கைத் தலைவர்களான பெரியார், காமராசர், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் ஆகியோரை விடவும், தவெக அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரையும் முன்னிலைப்படுத்தி வருகிறது.

இதன் மூலமாக அதிமுகவின் அடையாளத்தை குறி வைத்து தவெக செயல்பட்டு வருவதாக பார்க்கப்பட்டது. தற்போது செங்கோட்டையன் இணைப்புக்கு பின், தவெக நிர்வாகிகள் முதல்முறையாக அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் நினைவிடங்களுக்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தி இருக்கின்றனர். இதனால் அதிமுக இடத்தை பிடிக்க தவெக காய்களை நகர்த்தி வருவதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+