விஜய்க்கு லட்டு மாதிரி சான்ஸ்.. செங்கோட்டையன் வரவால் நல்லது தான்! ஆனால்.. அது திமுகவுக்கு! எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பது மிகப்பெரிய அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவுக்கு நிச்சயம் இது பலத்த பின்னடைவை கொடுக்கும். ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை விஜய் பிரிப்பார் என்பதால் அது திமுகவுக்கு சாதகமாக அமையும் எனவும் சொல்லப்படுகிறது. விஜயின் பிரபலம், செங்கோட்டையனின் அனுபவம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எப்படி கை கொடுக்கப் போகிறது? என்பதுதான் தமிழக அரசியல் களத்தில் தற்போதைய எதிர்பார்ப்பு.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் திடீரென்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சில நாட்களிலேயே, அவர் நேராக விஜயை சந்தித்து த.வெ.க. உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டது, தமிழகத்தின் எதிர்க்கட்சிகளையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

Sengottaiyan Joins TVK How Will Vijay s Party Gain in 2026 Politics

செங்கோட்டையன் மாற்றம்

செங்கோட்டையன் என்பவர் சாதாரண அதிமுக நிர்வாகி என கடந்து போய்விட முடியாது. கோபிசெட்டிபாளையத்தில் எட்டு முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். ஜெயலலிதாவின் அரசியல் தளபதி. 1991-ல் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். எடப்பாடியை அரசியல் ரீதியாக உயர்த்த உதவியவர். எடப்பாடி தலைமையில் அதிமுக வலுப்பெறவும் முக்கிய பங்காற்றியவர் என சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட ஒரு வலுவான, அனுபவமிக்க, செல்வாக்கு கொண்ட தலைவர் த.வெ.க.வில் இணைவது, அந்தக் கட்சிக்கு ஒரு புதிய அரசியல் வலிமையைத் தந்திருக்கிறது.

விஜய் கட்சி

இந்த மாற்றம் நிகழ்ந்த நேரமும் மிகவும் குறிப்பிடத்தக்கது. கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் த.வெ.க. மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அந்நேரத்தில் விஜய் எந்தப் பொதுக் கருத்தும் வெளியிடாததால் எதிர்க்கட்சிகள் அவரைத் கடுமையாகத் தாக்கின. ஆனால் அதற்கு பிந்தைய வாரங்களில், செங்கோட்டையன் போன்ற மூத்தவர் த.வெ.க.வில் இணைவது, அந்தக் கட்சியின் மீதான நம்பிக்கையை மீண்டும் உயர்த்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இதே நேரத்தில், அதிமுக கூடாரத்தில் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. செங்கோட்டையன் சசிகலா, ஓ.பி.எஸ். மற்றும் தினகரனுடன் தொடர்பு வைத்ததாக குற்றம் சாட்டி, அவரை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கியது, அதிமுக தொண்டர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது. இந்த முடிவை பலர் எதிர்பார்க்காத ஒரு திடீர் நடவடிக்கையாகவே பார்த்தனர். அதன் விளைவாக, அதிமுகவிலிருந்து வெளியேறும் மற்ற தலைவர்களும் த.வெ.க.வை நோக்கி நகர வாய்ப்புகள் உருவாகியுள்ளன என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதிமுக - பாஜக கூட்டணி

இந்த நிகழ்வு வரவிருக்கும் தேர்தலுக்கான கூட்டணிகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏற்கெனவே அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திக்கும் நிலையில், அதிமுக மீது சில கட்சிகள் நம்பிக்கையில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் த.வெ.கவை மற்றும் சிறு மற்றும் நடுத்தர கட்சிகள் நெருங்கி வரும் சூழல் உருவாகியுள்ளது. ஒருபுறம் அதிமுக-பாஜக கூட்டணி; மறுபுறம் த.வெ.க. அணியும் உருவானால், திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறி ஆளும் திமுகவுக்கு இது மறைமுகமாக லாபமாக முடியும் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது.

தமிழக அரசியல்

மொத்தத்தில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்திருப்பது ஒரு சாதாரண கட்சி மாறுதல் அல்ல. அதிமுகவின் பல வருடக் கட்டமைப்பையே குலைக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் முடிவு இது. அதேசமயம், நடிகர் விஜயின் கட்சிக்கும் மிகப்பெரிய அரசியல் லாபத்தை அளிக்கக் கூடிய மாற்றமாக மாறியுள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த மாற்றம் எந்தப் பக்கம் எப்படி நகரும் என்பது தான் தமிழக அரசியலில் மிகப் பெரிய சுவாரஸ்யமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+