அதிமுகவில் இருந்து இன்னும் சிலர் தவெகவுக்கு வருவார்களா? செங்கோட்டையன் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ல் மக்கள் சக்தியின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வார் என்று அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். புதியவர்கள் ஆள வேண்டும் என்ற மக்களிடையே எழுந்துள்ளதாகவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த மாதம் நீக்கப்பட்டார். இதன்பின் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு வந்த அவர், திடீரென தவெகவில் இணைந்தார். தவெக தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் கூட நிறைவடையாத சூழலில், செங்கோட்டையன் எடுத்த முடிவு குறித்த விவாதங்கள் தொடங்கி இருக்கிறது.

Sengottaiyan joins TVK

அதேபோல் 77 வயதாகும் செங்கோட்டையன் 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் கொண்டவர். இதனால் செங்கோட்டையனின் அரசியல் அனுபவம் விஜய்க்கும், தவெகவுக்கும் மிகப்பெரிய துணையாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப செங்கோட்டையனுக்கான மரியாதையையும் விஜய் சரியாக வழங்கி இருக்கிறார்.

வழக்கமாக அனைவரும் வந்தபின் பனையூர் அலுவலகம் வரும் விஜய், இம்முறை செங்கோட்டையனுக்காக முன்னதாக வந்து காத்திருந்தார். அதேபோல் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் 4 மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை செங்கோட்டையனுக்கு விஜய் வழங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் புறப்பட்டார். அப்போது செங்கோட்டையனின் காரில் தவெகவின் கொடி கட்டப்பட்டிருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், ஈரோடு சுற்றுப்பயணம் தொடர்பாக விரைவில் விஜய்யுடன் கலந்து பேசி முடிவுகள் எடுக்கப்படும்.

புதியவர்கள் ஆள வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மக்களால் நேசிக்கப்படுகிற எல்லோரும் வர வேண்டும் என்று தான் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இதன் மூலமாக 2026ல் மக்களின் ஆதரவுடன் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வார்.

அதிமுகவில் இருந்து இன்னும் சிலர் வருவார்களா என்ற கேள்விக்கு பதில் கூறினால் பிரச்சனைகள் வரும்.. ஈரோடு மாவட்டத்தில் சில சொந்த பணிகள் இருக்கிறது. மீண்டும் சென்னை வந்த பின் விஜய்யிடம் ஒப்புதல் பெற்று சுற்றுப்பயணம் குறித்து முடிவு எடுக்கப்படும். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழ்நாடு முன்னேற அயராது உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+