விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது.. செங்கோட்டையன் கருத்தை ஏற்க முடியாது! பெ.சண்முகம்
சென்னை: "எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைத்தான் கையகப்படுத்த வேண்டும் என்று செங்கோட்டையன் எந்த அடிப்படையில் பேசினார் என்று தெரியவில்லை,. முப்போகும் விளையும் நிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றுவது உணவு தானிய உற்பத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் , தரிசு நிலங்களை மட்டுமே கண்டறிய வேண்டியது அரசின் முக்கியப் பொறுப்பு.. அதனால் செங்கோட்டையனின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெ.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அந்த மக்களிடம் அவர்களின் கோரிக்கை மனுக்களை அவர் நேரில் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் அவர் ஆற்றிய உரை அப்பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

மூத்த தலைவர் பெ.சண்முகம்
மூத்த தலைவர் பெ.சண்முகம் பேசும்போது, "கல்லுக்குட்டை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருகிறார்கள்.. ஆனால் அவர்களுக்கு சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இதுவரை கிடைக்கவில்லை..
100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் சென்னையின் பல பகுதிகளில் இன்னும் பட்டா வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டே வருகிறது.இதனால் இப்பகுதி மக்கள் தகுதி இல்லாத மனிதர்களைப் போல வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.. அதனால் உடனடியாக மக்களுக்குக் குடிமனைப் பட்டா வழங்க அரசு முன்வர வேண்டும்..
மேட்டூர் அணை
வருகிற செப்டம்பர் 1ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக முதல்வர் தண்ணீர் திறந்து விட உள்ளார்கள்.. நீர்வளத்துறை அமைச்சர் 45 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்படும் என்று கூறியிருப்பது விவசாயிகளிடையே குழப்பத்தையே தந்துள்ளது.. எந்த அடிப்படையில் அவர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டார் என்பது புரியவில்லை.. இதுபோன்ற நிலை நீடித்தால் வரும் காலங்களிலும் கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் தராமல் ஏமாற்றும் சூழல் உருவாகும்..
ஏனென்றால், கர்நாடகா எப்போதுமே உபரி நீரைத்தான் நமக்கு வழங்கி வருகிறது.. நமக்கு உரிமையான முழுமையான நீரைப் பெற தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் மூலமாகவும், மத்திய அரசை வற்புறுத்தியும் தமிழகத்திற்கு கர்நாடக தர வேண்டிய நீரைப் பெற உத்தரவாதமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே விவசாயம் தழைக்கும்..
ஒரு போக சாகுபடி பாசனத்திற்குரிய முழு நீரையாவது தமிழ்நாடு அரசு பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் தமிழகத்திற்குரிய தண்ணீரை முழுமையாக வழங்க வேண்டும் என்று உத்தரவிடாமல், குறிப்பிட்ட அளவு மட்டும் வழங்கச் சொன்னது தமிழக விவசாயிகளுக்கு வருத்தத்தையே தந்துள்ளது..
செங்கோட்டையன் பேச்சு சரியல்ல
அதேபோல எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைத்தான் கையகப்படுத்த வேண்டும் என்று செங்கோட்டையன் எந்த அடிப்படையில் பேசினார் என்று தெரியவில்லை,. முப்போகும் விளையும் நிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றுவது உணவு தானிய உற்பத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் , தரிசு நிலங்களை மட்டுமே கண்டறிய வேண்டியது அரசின் முக்கியப் பொறுப்பு.. அதனா7ல செங்கோட்டையனின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது.
இடதுசாரிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று வழங்கப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக விளக்கம் கேட்டு ஏற்கனவே முதல்வருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அது மட்டும் போதுமானதல்ல..
சர்க்கரை ஆலை
கடந்த ஆட்சியில் இயந்திரங்களை நவீனப்படுத்தக் குறைந்தபட்ச தொகையைக் கூட ஒதுக்க முன்வராத காரணத்தினால்தான் அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டது..தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்த தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
ஜல்லிக்கட்டு மைதானம் திறக்கப்பட்டது தவறு கிடையாது.. சென்னைக்கு அருகில் இரண்டாவது விமான நிலையம் அமைய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.. விவசாயத்திற்குத் தகுதியற்ற தரிசு நிலங்கள் எங்கு உள்ளன என்பதைக் கண்டறிந்து அங்கு மட்டுமே 2வது விமான நிலையத்தை உருவாக்க வேண்டும், முதலமைச்சரும் அதையே குறிப்பிட்டுள்ளதால், அதை உடனடியாக நடைமுறைப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
