செங்கோட்டையன் டீல் ஓகே.. உள்ளே வந்ததும்.. மொத்தமாக மாறும் 10 விஷயங்கள்.. கண்ணசைக்கும் விஜய்
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் (TVK) மூத்த தலைவர் செங்கோட்டையன் இணையக்கூடும் என்ற செய்தி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையனின் வருகை தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான பலத்தை கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையனின் அனுபவமும் செல்வாக்கும், வரவிருக்கும் தேர்தல்களில் தமிழக வெற்றி கழகத்திற்கு பல நன்மைகளை கொண்டு வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். செங்கோட்டையனின் இணைப்பால், தமிழக வெற்றி கழகம் பல வழிகளில் பயனடையலாம். செங்கோட்டையன் மூலம் தவெகவிற்கு வரப்போகும் முக்கியமான 10 நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

1. செங்கோட்டையனின் நீண்டகால அரசியல் வாழ்க்கையை அறிந்த மூத்த வாக்காளர்களை தவெக கட்சிக்குள் ஈர்க்க முடியும். இப்போது தவெகவிற்கு இளைஞர்கள் ஆதரவே அதிகம் உள்ளது. வரும் நாட்களில் செங்கோட்டையன் வருகையால் மூத்தவர்கள் ஆதரவு அதிகரிக்கும்.
2. அதிமுக மீது அதிருப்தியில் உள்ள பாரம்பரிய வாக்காளர்கள் விஜய் பக்கம் திரும்பலாம். பொதுவாக அதிமுக வாக்குகள் எல்லாமே திமுக எதிர்ப்பு வாக்குகள்தான். இப்போது விஜய் திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். பலமான அதிமுக நிர்வாகிகளின் வருகை காரணமாக.. அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளும் விஜய் பக்கம் செல்வார்கள்.
3. மேலும், கட்சியின் உள் கட்டமைப்பு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், கட்டுப்பாடுடனும் செயல்பட வாய்ப்புள்ளது. செங்கோட்டையன் போன்ற மூத்தவர் கட்சியின் ஒழுங்கை நிலைநாட்ட முடியும்.
4. தேர்தல் பிரச்சார உத்திகள் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறனை செங்கோட்டையனின் அனுபவம் மேம்படுத்தும். செங்கோட்டையன் ஜெயலலிதாவின் பிரச்சார திட்டங்களையே வகுத்தவர். அதன்படியே விஜயின் திட்டங்களை அவர் வகுக்க முடியும்.
5. செங்கோட்டையன் வருகையால்.. தவெகவில் வாக்குச்சாவடி அளவிலான மேலாண்மை மற்றும் அடிமட்ட ஒருங்கிணைப்பு மிகவும் வலுவடையும். கிராமப்புற மற்றும் பாரம்பரிய வாக்காளர்களிடையே TVK-வின் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6. அரசியல் திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகள் மிகவும் சீரானதாக மாறும். இளம் கட்சி உறுப்பினர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலையும், mentoring-ஐயும் அவர் வழங்குவார். இது சிக்கலான தேர்தல் சூழ்நிலைகளை எதிர்கொள்ள கட்சிக்கு தன்னம்பிக்கையை அளிக்கும்.
7. கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடு மிகவும் திறம்பட கையாளப்படும். செங்கோட்டையன் போன்றவர் இருந்தால் வலிமையான பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும். வலுவான நிலைப்பாடுகள், கருத்துக்களை செங்கோட்டையன் வைக்க முடியும்.
8. ஒட்டுமொத்த தேர்தல் பிரச்சாரச் திட்டங்கள் தெளிவாகவும், இலக்குடன் கூடியதாகவும் மாறும். செங்கோட்டையன் இணைவது, TVK-க்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கரூர் போன்ற தவறுகள், சொதப்பல்கள் நடக்காமல் இருக்க செங்கோட்டையனின் அனுபவம் உதவும்.
9. இது, புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தை, தமிழக அரசியலில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் போட்டிமிக்க கட்சியாக மாற்ற உதவும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10. அதோடு செங்கோட்டையன் வருகையால் வேட்பாளர்களை தேர்வு செய்வது, அவர்களை இன்டர்வியூ செய்து, வேட்பாளர் லிஸ்டை உருவாக்க முடியும். டெல்லி உடன் செங்கோட்டையனுக்கு இருக்கும் சமீப கால தொடர்புகளும் விஜய்க்கு உதவியாக மாறும்.
-
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி?












Click it and Unblock the Notifications