விஜய் பிரதமரா? 9 சதவீதம் பேர் ஆதரவு! கருத்துகணிப்பு குறித்து செங்கோட்டையன் சொல்றதை பாருங்க
சென்னை: வட மாநிலங்களில் விஜய்க்கு ஆதரவாக ரீல்ஸ்கள் பகிரப்பட்டு வரும் சூழலில், பிரதமர் ரேஸில் விஜய்க்கு 9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிப்பதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கோவை விமான நிலையத்தில் செய்தியாள்ர்களுக்கு பேட்டி அளித்த தவெக அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து பதில் அளித்துள்ளார்.
நாட்டின் அடுத்த பிரதமராக யாரை விரும்புகிறீர்கள் என்று இந்தியா டுடே சி வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்புகளில் விஜய்க்கு மூன்றாம் கிடைத்தது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், தேசிய அளவில் அவரது செல்வாக்கு தற்போது அதிகரித்து வருவது அரசியல் வட்டாரத்திலும் அதிகம் கவனம் பெற்றுள்ளது.

மாணிக்கம் தாகூர் கருத்து
ஒரு பக்கம் காங்கிரஸ் தயவுடன் தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் உள்ள நிலையில், மற்றொரு பக்கம், தவெக அமைச்சர்கள் பலரும் விஜய்தான் அடுத்த பிரதமர் என்றும் தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என்று பேசி வருவது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும் இதுகுறித்து காட்டமான பதிலை கொடுத்து இருந்தார்.
அமைச்சர் செங்கோட்டையன் பதில்
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிதான் முதலில் ஆதரவு அளித்தது எனவும் இல்லையென்றால், அமித்ஷா எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியிருப்பார் எனவும் கூறியிருந்தார். வட இந்தியாவிலும் விஜய்க்கு ஆதரவாக ரீல்ஸ்கள் அதிகம் பரப்பப்படும் நிலையில், இந்த கருத்து கணிப்பும் அரசியல் வட்டாரத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டது.
இந்த சூழலில், கோவை விமான நிலையத்தில் செய்தியாள்ர்களுக்கு பேட்டி அளித்த தவெக அமைச்சர் செங்கோட்டையனிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- "தமிழ்நாட்டில் முதல்வராக விஜய் பெறுப்பேற்றுள்ளார். அவருடைய பணிகளை பார்க்க பார்க்கத்தான் மக்களிடையே மாற்றங்கள் உருவாகும்.
நாளை என்ன நடக்கப்போகிறது
தேசிய கட்சி என்பது வேறு மாநில கட்சி என்பது வேறு. கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் உள்ள இயக்கம் வேறு. சின்னம் பெற்ற இரண்டே மாதங்களில் சின்னத்தை பெற்று வரலாறு வேறு.. நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்காலம் தான் நிர்ணயிக்கும்.. தேசிய அளவில் ஒரு முன்னணி தலைவர் என்று நான் சொன்னதற்கு காரணமே, அவருடைய திட்டங்கள், அவருடைய எண்ணங்கள்..
ஒரு நேர்மையான ஆட்சியை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். இதுவரைக்கும் யாராவது இப்படி சொல்லியிருக்கிறார்களா? சொல்ல முடிந்ததா? எந்த கட்சியாவது சொல்லியதா? துணிந்து சொல்லியிருக்கிறார் முதல்வர் விஜய்.. அதை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
