2 பேருக்கு நடுவுல தான் போட்டி! திமுக Vs தவெக..விஜயால் மாறும் களம்? செங்ஸ் மீது ஏக கடுப்பில் எடப்பாடி
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என அதிமுக பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுகவை விட அதிமுகவையே தமிழக வெற்றி கழகம் அதிகமாக டார்க்கெட் செய்வதாக சொல்லப்படுகிறது. அதிமுக பேச்சுவார்த்தை நடத்தும் கட்சிகளுடன் செங்கோட்டையனும் பேசத் தொடங்கி இருக்கும் தகவல் அதிமுக- பாஜகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
2026 தேர்தல் அவ்வளவு எளிதாக இருக்காது போல.. ஆளும் கட்சியான திமுக ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கிறது. கூடுதலாக சில கட்சிகளுடன் பேச்சு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. பாமக ராமதாஸ் தரப்பு, தேமுதிக தலைமை திமுகவுடன் இணக்கத்தை பேணி வருகிறது.
அதே நேரத்தில் பாமக வந்தால் நாங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி திட்டவட்டமாக கூறியுள்ளது. இது ஒரு புறம் இருக்க பாஜக அதிமுக கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படாமலேயே இருக்கிறது.

செங்கோட்டையன் தவெக
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அதிமுக பாஜக தவிர்த்து பெயர் சொல்லிக் கொள்ளும்படி எந்த கட்சியும் இல்லை. இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்துடன் அதிமுக தரப்பு பேசி வருகிறது. 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டியிடலாம் எனவும் மீதமிருக்கும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்று இருப்பது அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி
காரணம் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் சரி, எடப்பாடி பழனிச்சாமி காலத்திலும் சரி, பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தும் பொறுப்பை செங்கோட்டையன் இயற்றிருக்கிறார். திமுக தவிர்த்து மற்ற அனைத்து கட்சி தலைவர்களுடனும் செங்கோட்டையனுக்கு நல்ல பழக்கம் உள்ளது. சொல்லப்போனால் திமுகவின் சில தலைவர்களுடன் செங்கோட்டையன் இணக்கமாகவே சென்றிருக்கிறார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணியை இறுதி செய்ய அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார்.
பாமக தேமுதிக
மேலும் அவரது தமிழக வருகையின் போது கூட்டணி உறுதி செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்க்காமல் அவர்கள் தனி கட்சி ஆரம்பித்தால் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கோடு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கும் செங்கோட்டையன், பாமக, தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
அதிமுக கூட்டணி
தமிழக வெற்றிக்கழக கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என உறுதி அளித்திருக்கும் செங்கோட்டையன், 2026 தேர்தலில் போட்டியிட்டால் பாமகவுக்கும், தே.மு.தி.கவுக்கும் தலா நாற்பது தொகுதிகளை ஒதுக்கலாம் என தூது விட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணிக்கு சென்றால் 25 முதல் 25 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். அதே நேரத்தில் கூடுதல் தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தோடு தவெகவுடன் தேர்தலை சந்திக்கும் போது நிர்வாகிகள் உற்சாகமடைவார்கள் மேலும் பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.
அதிமுக பாஜக அதிர்ச்சி
வெற்றி தோல்வி என்பது சகஜம் தான் என்றாலும், கூட்டணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ள இரு கட்சிகளுமே ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தை வைத்து அதிமுகவில் தங்கள் பேர வலிமையை கூட்டிக் கொள்ளலாம் எனவும் இரு கட்சிகளும் நினைப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அதிமுக பாஜக தலைமைக்கு சென்றிருக்கும் நிலையில் செங்கோட்டையன் -விஜயின் அடுத்தடுத்த மூவ்களால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications