செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறாரா? சிடிஆர் நிர்மல் குமார் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செங்கோட்டையன், தவெகவில் வரும் 27 ஆம் தேதி இணைய இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில், இது குறித்து தவெக நிர்வாகி நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு நிர்மல் குமார் கொடுத்த பதிலை இங்கே பார்க்கலாம்.
அதிமுகவின் மிக மூத்த தலைவராக விளங்கிய செங்கோட்டையன் அண்மையில் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் 10 நாட்களில் இந்த பணிகளை செய்யாவிட்டால் நானே அதற்கான பணிகளை தொடங்குவேன் என்று கட்சியின் தலைமைக்கு அதாவது எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார்.

இதனால், கடும் அப்செட் ஆன எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் கட்சி பதவிகளை பறித்தார். இதையடுத்து, சில நாட்கள் அமைதியாக இருந்த செங்கோட்டையன் தேவர் ஜெயந்தி விழாவில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்தார். இதையடுத்து, செங்கோட்டையனை கட்சியில் இருந்தே நீக்கினார் எடப்பாடி.
அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சியின் உறுப்பினராக இருக்க கூடிய செங்கோட்டையனை எடப்பாடி நீக்கியது அரசியல் வட்டாரத்திலும் அதிகம் பேசுபொருளானது. அதிமுகவில் இருந்து நீக்கப்ட்ட நிலையில் செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து அவரது ஆதவாளர்கள் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.
இந்த நிலையில், செங்கோட்டையன் நாளை மறுநாள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணையப் போவதாக இணையதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக செங்கோட்டையனிடம் விளக்கம் கேட்க பத்திரிகையாளர்கள் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
அவரது உதவியாளர்கள் கூறும்போது, செங்கோட்டையன் எதுவும் பேசவில்லை. நிர்வாகிகளையும் இப்போது சந்திக்கவில்லை என்று மட்டும் கூறினர். இணையதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த தகவலை இதுவரை செங்கோட்டையன் மறுக்கவும் இல்லை, அது வதந்திதான் என்றும் கூறவில்லை.
இந்த நிலையில், தவெக இணை செயலாலர் சிடிஆர் நிர்மல் குமாரிடம் இன்று செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி கேட்டனர். அதாவது செங்கோட்டையன் தவெகவில் இணைய இருப்பதாக செய்திகள் பரவுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்ட போது, மற்றவை பற்றி அப்புறம் பேசலாம் என்று நேரடியாக பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications