செங்கோட்டையன் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த டீமும் தவெகவில் ஐக்கியம்! பாண்டிச்சேரியிலும் இன்னிங்ஸ் தொடக்கம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை இணைய இருக்கிறார் 10 மணிக்கு இணைப்பு விழா நடைபெற இருக்கிறது. செங்கோட்டையன் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்கள் பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைகின்றனர். அது மட்டும் அல்லாமல் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சுவாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்எல்ஏ ஹஸனாவும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளனர்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்க்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என சில கட்சிகள் நினைத்த நிலையில் அதற்கு நேர்மாறாக நடைபெற்று வருகின்றன சமீபத்திய அரசியல் நிகழ்வுகள். கரூர் சம்பவம் நடந்த அன்றே விஜய் சென்னைக்கு புறப்பட்டு சென்றது, அடுத்த நாள் அறிக்கை விட்டது பல நாட்களுக்குப் பிறகு வீடியோ வெளியிட்டது என விஜய்க்கு அடுத்தடுத்து எதிர்ப்புகள் தான் கிளம்பியது.
தமிழக அரசு எஸ்ஐடி குழு அமைத்ததும் விஜய்க்கு பெரும் சோதனையாக பார்க்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு உற்சாகமடைந்திருக்கும் விஜய் தரப்பு மீண்டும் காள அரசியலுக்கு திரும்பி இருக்கிறது.

செங்கோட்டையன்
பொதுக்குழுவை நடத்தி முடித்த கையோடு மீண்டும் மக்கள் சந்திப்பை தொடங்கி இருக்கிறார் விஜய். காஞ்சிபுரத்தில் விஜயின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. வழக்கம்போல் திமுக எதிர்ப்பையே பிரதானமாக கொண்டு பேசி வருகிறார் விஜய். அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. காரணம் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியால் வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியமாக இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம்
கடந்த ஒரு மாதமாகவே செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் அவர் திமுகவில் இணையலாம் என சொல்லப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஒரு அமைச்சர் தொடர்ந்து செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே தமிழக வெற்றிக்கழகத்தில் செங்கோட்டையன் இணையப் போகிறார் என்ற தகவல் பரபரப்பை கிளப்பியது. ஆம், இல்லை என எந்த பதிலையும் சொல்லாத செங்கோட்டையன் திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
விஜய் தவெக
கட்சி காவல் தடை சட்டத்தின் படி ஒரு கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ மாற்றுக் கட்சியில் இணைய முடியாது. ஆனால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் செங்கோட்டையன் எம்எல்ஏவாக தொடர்ந்தாலும் வேறு எந்த கட்சியில் வேண்டுமானாலும் அவர் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் அதை செய்யாமல், இரட்டை இலை மூலம் கிடைத்த எம்எல்ஏ பதவி தனக்கு வேண்டாம் என உதறி விட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருக்கிறார். கடைசி நேரத்தில் கூட அமைச்சர் சேகர்பாபு செங்கோட்டையனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் இன்று விஜயை சந்தித்து பேசியது அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறார் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
இணைப்பு நிகழ்ச்சி
செங்கோட்டையன் மட்டுமல்லாது ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் வலுவாக இருந்த பல அதிமுக புள்ளிகளும் செங்கோட்டையுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருக்கிறார்கள். நாளை 10 மணிக்கு இணைப்பு நிகழ்ச்சியானது நடைபெற இருக்கிறது. செங்கோட்டையனுடன் அவரது ஆதரவாளர்கள் பலரும் புதுச்சேரியைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணை இருக்கின்றனர். இதன் மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாது புதுச்சேரியிலும் விஜய் தனது அரசியல் கணக்கை தொடங்க இருக்கிறார்.
ஈரோடு புள்ளிகள்
இதற்கிடையே செங்கோட்டையுடன் நாளை யார் யார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்புகிறார்கள் என்ற தகவல் கசிந்து இருக்கிறது. அதன்படி, முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் இணைகின்றனர். இதேபோல், புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார்.
-
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
Perambur Power Cut: பவர் இல்லை சிஎம்! பெரம்பூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்த மக்கள் -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
"எதே ராகவா லாரன்ஸா.. அடேய் விஷால் நீயும் கட்சி ஆரம்பி" தெறிக்கும் அரசியல் மீம்ஸ்! -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!











Click it and Unblock the Notifications