சந்தை கடை சண்டை போல்..சட்டசபையில் மோதிக் கொள்ளும் தவெக - திமுக! ’சீனியர்’ செங்கோட்டையன் சொன்ன மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளுங்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுக இடையே நடைபெற்று வரும் வார்த்தை போர், சந்தை கடை சண்டை போல இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் சட்டசபையில் எதிர்காலத்தில் தமிழகத்திற்கு என்ன செய்யலாம் என்ற கருத்துக்களை பரிமாறிக் கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும், வார்த்தை ஜாலங்களால் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது என தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் கேஎ செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் கார் தேவை. ஒரு ஓட்டுநர், உதவியாளர் தேவை. ஒன்றிய குழுவில் இருக்கும் ஒன்றிய குழு தலைவர்களுக்கு, நகராட்சி தலைவர்களுக்கு தனியாக வாகனம் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது.

Sengottaiyan TVK DMK

இப்பொழுது நாங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ளோம். திமுகவினர் தங்களுக்கு கார் வேண்டியதில்லை என்று சொல்ல காரணம் அவர்கள் ஆட்சியில் இதை நிறைவேற்ற முடியவில்லை என்ற எண்ணம் தான்.

கே.ஏ. செங்கோட்டையன்

ஒரு கார் உங்களிடம் இருக்கிறது. குழந்தைகள் போய் வர இன்னொரு கார் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா? நிதி நெருக்கடி என்பது ஒன்று. அதே நேரத்தில் தன்னலம் என்று வழி இல்லாமல் பணி செய்ய இது எதுவாக இருக்கும் என்ற மனித நேயத்தில் முதல்வர் வழங்கி இருக்கிறார். பல்வேறு நிதி சுமைகள் இருந்தாலும் எதை செய்யலாம் என முடிவு செய்கின்றோம். ஆந்திராவில் முதன் முதலில் இதே போல வாகனம் கொடுத்தார்கள்.

எம்எல்ஏக்களுக்கு கார்

இன்று இருக்கின்ற நிதி நெருக்கடியின் காரணமாக வாங்கவில்லை என்று சொல்வது, அவர்கள் காலத்தில் செய்ய முடியவில்லை இவர்கள் செய்து விட்டார்களே என்ற வேதனைதான். மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரை முதல்வர் தெளிவாக இருக்கிறார்.ஒரு செங்கலை கூட அங்கே வைக்க முடியாது என்பது கொள்கை முடிவு. அதில் தெளிவாக இருக்கிறார். நேற்று பேசும்போது கூட உள்துறை அமைச்சரிடம் தெளிவாக கூறியிருக்கிறார். காவிரி டெல்டா நிலங்கள் அனைத்தும் ஆபத்து ஏற்படும். என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இடதுசாரிகள்

மேகதாது விவகாரத்தில் தெளிவான முடிவுகளை இந்த அரசு மேற்கொண்டு இருக்கிறது. என்றைக்கும் நம் நிலைப்பாட்டை மீறி அணைக்கட்ட முடியாது. இடதுசாரிகள் வறட்சி என்ற முறையில் நிவாரண நிதி வழங்க வேண்டும் என சொன்னார்கள் வறட்சி நிவாரணத்தை பொறுத்த வரை செப்டம்பர் மாதம் இறுதியில் வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறோம். குறிப்பிட்ட பகுதியில் வட்டாட்சியர் அவர்கள் இடதுசாரி பொறுப்பாளர்கள் குறித்து பட்டியல் எடுக்க உத்தரவு வழங்கினார்.

வட்டாட்சியர் விவகாரம்

இது இரவு தான் எனக்கு தெரியும். தகவல் தெரிந்தவுடன் இரவோடு இரவாக அவர் மாற்றப்பட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இரவு 8:30 மணிக்கு தகவல் வந்தது. அவர் கொடுத்த கடிதம் உடனே திரும்பப் பெறப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

3 கோப்புகள்

சட்டமன்றத்தில் 3 கோப்புகள் குறித்த முதல்வர் விஜய் பேசியுள்ளார். சட்டமன்றத்தில் வீர முழக்கம் வழக்கம்தான். நடவடிக்கை குறித்து எந்த தேதியில் எப்போது அறிவிப்பார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஒரு சட்ட விதியின் அடிப்படையில் கோப்புகளை பார்த்து , அது என்ன நடைபெற்று இருக்கிறது என உணர்ந்த பிறகு சட்டதுறையோடு கலந்து பேசி என்ன நடவடிக்கை என்பதை தயார் நிலையில் வைத்து கொண்டுதான் என்ன நடவடிக்கை என்பதை பேச முடியும். கோப்புகளில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது என நிதி அமைச்சர், முதல்வரிடம் விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+