செங்கோட்டையன் ஜெயிச்சது செல்லாது.. சுப்ரீம் கோர்ட்டுக்குப் போன பிரபு! அடிப்படையில் நடந்த தவறு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். செங்கோட்டையனின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது தவறு எனவும், நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால் செங்கோட்டையனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். வருவாய்த்துறை அமைச்சரான செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Sengottaiyan Supreme Court TVK AIADMK

அந்த மனுவில், செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்பு மனுவை ஏற்றதே தவறு எனவும், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதேபோல், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார். இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். செங்கோட்டையனின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது தவறு எனவும், நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால் செங்கோட்டையனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால், அதனை ஏற்று தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

அடிப்படையிலேயே தவறு நடந்திருக்கிறது. எனவே, செங்கோட்டையன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் பிரபு கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+