ஜார்க்கண்ட் ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன்.. எச்.ராஜா, ஓபிஎஸ்,சசிகலா, அண்ணாமலை வாழ்த்து
ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு எச்.ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அதிமுக ஓபிஎஸ் அணி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் சசிகலா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 12 மாநிலங்களுக்கான ஆளுநர்களையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக பணியாற்றி வரும் இல.கணேசன், தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் முதலில் ஆளுநர் பதவியைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து பாஜகவின் இல.கணேசனுக்கு ஆளுநர் பதவி கிடைத்தது. தற்போது கோவை சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா: சக நிர்வாகியும் நீண்ட கால நண்பருமான அன்பு சகோதரர் திரு
சிபி ராதாகிருஷ்ணன், அவர்கள் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஏற்றிருக்கின்ற பொறுப்பில் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
அதிமுக பொதுச்செயலாலராக உரிமை கோரும் விகே சசிகலா: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களாகிய நம் அனைவருக்கும் மிகவும் பெருமை அளிக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் மிகவும் எளிமையானவர், அனைவரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்.அன்பு சகோதரர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களது மக்கள் பணி எந்நாளும் சிறக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
அதிமுக ஓபிஎஸ் அணியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.C.P.ராதாகிருஷ்ணன்
@CPRBJP அவர்கள் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள்!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை: நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள
@BJP4TamilNadu முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான திரு இல. கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். @BJP4India ன் மூத்த தலைவர்களில் ஒருவரான அவரது அரசியல் பயணம், கட்சியின் ஒவ்வொரு இளைய தொண்டர்களுக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியதாகும். ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள @BJP4TamilNadu முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்பியுமான திரு
@CPRBJP அண்ணாவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். @BJP4India-ன் உறுதியான தொண்டரான அவர், தனது சித்தாந்தத்தை அணிகலனாகக் கொண்டு, தனது அனைத்துப் பொறுப்புகளிலும் தனி முத்திரை பதித்திருந்தார்.












Click it and Unblock the Notifications