காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
சென்னை: 93 வயதான குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். தமிழ்நாடு அரசின் தகைசால் விருதினை பெற்றவர் குமரி அனந்தன். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை ஆவார். குமரி அனந்தன் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் (வயது 93). இலக்கியவாதி. வயது மூப்பு காரணமாக குமரி அனந்தன் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவரது உடல் நிலை மோசமடைந்தது.

குமரி அனந்தன் காலமானார்
இதையடுத்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் குமரி அனந்தன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும், மறைந்த எம்பி வசந்தகுமாரின் அண்ணனுமான குமரி ஆனந்தன் வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். வயது மூப்பு, சிறுநீரக பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரி அனந்தன் சிகிச்சை பலனின்றி காலமானார்.
பொதுமக்கள் இரங்கல்
கடந்த 4 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணம் அடைந்தார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சவுந்தரரஜன் இல்லத்திற்கு குமரி அனந்தன் உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். குமரி அனந்தன் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக குமரி அனந்தன் பதவி வகித்து வந்துள்ளார். இலக்கியச் செல்வர் என அனைவராலும் அழைக்கப்பட்டவர். தமிழ்நாடு அரசு குமரி அனந்தனுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு தகைசால் விருதை வழங்கி கவுரவித்து இருந்தது. காமராஜர் ஆட்சி காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 5 முறை எம் எல் ஏவாகவும், ஒரு முறை குமரி மாவட்ட எம்பியாகவும் குமரி அனந்தன் பணியாற்றியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் ஹரிகிருஷ்ணன் - தங்கம்மாள் தம்பதிக்கு கடந்த 1933 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் அனந்தகிருஷ்ணன். தமிழ் மீது கொண்ட ஆவலால், தமிழில் இளங்கலை, முதுகலை பட்டம் முடித்தார். இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். தற்போதைய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜனும் இவரது மகள் ஆவார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications