"மொழிப்போர் தளபதி".. திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் உடல்நலக் குறைவால் காலமானார்
சென்னை: தஞ்சை ஒரத்தநாட்டைச் சேர்ந்த திமுக மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்.கணேசன் (92) உடல்நலக் குறைவால் காலமானார்.
தஞ்சை மாவட்டம், பாலாஜி நகரில் உள்ள இல்லத்தில் திமுக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எல்.கணேசன் (92) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். தஞ்சை ஒரத்தநாட்டைச் சேர்ந்த எல்.கணேசன் மொழிப்போர் தளபதி என அழைக்கப்படுபவர். அண்ணா, கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்ட திராவிட இயக்கத் தலைவர். 3 முறை எம்எல்ஏவாக இருந்த எல்.கணேசன் மாநிலங்களவை எம்பியாகவும் பதவி வகித்திருக்கிறார்.

1980 ஆம் ஆண்டில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது நாட்டின் அவசர நிலையின்போது மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். 2004 இல் திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாக தேர்வானார்.
வைகோ மதிமுகவை தொடங்கியபோது திமுகவில் இருந்து விலகி மதிமுகவிற்கு சென்ற எல்.கணேசன், சில ஆண்டுகளில் மீண்டும் திமுகவிற்கே திரும்பினார். எல்.ஜி. என அரசியல் வட்டாரத்தில் அறியப்பட்ட இவர், மொத்தம் 3 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.
சட்ட மேலவை, சட்டசபை, மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர் என்று 4 பதவிகளையும் வகித்தவர். வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த எல்.கணேசன் இன்று அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார்.
-
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications