செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அதே இலாகா.. ஸ்டாலினின் “பக்கா பிளான்”.. புட்டு புட்டு வைக்கும் சீனியர்!
சென்னை: தமிழக அமைச்சரவை மாற்றம், அரசியல் களத்தில் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டது, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு, துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு ஆகியவை எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில், இதன் பின்னணி பற்றி ஒன் இந்தியாவுடன் அலசுகிறார் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு, ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காலநிலை மாற்றம் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 பேரின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் கா.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டு, புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி சா.மு. நாசர், கோவி.செழியன் மற்றும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் 'நக்கீரன்' பிரகாஷ் ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அது இங்கே..
கேள்வி: முதல்வர் ஸ்டாலினின் இந்த அமைச்சரவை மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
நக்கீரன் பிரகாஷ்: அமைச்சரவை மாற்றம் என்பது திட்டமிடப்பட்ட ஒரு ஆபரேஷன். ஆதர் அர்ஜுன், ஆட்சியில் தலித்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் எனப் பேசினார். இப்போது அமைச்சரவையில் 4 தலித் அமைச்சர்கள் உள்ளனர். அதிலும் கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது. சீனியர் அமைச்சர் பொன்முடியிடம் இருந்து உயர்கல்வித்துறை பறிக்கப்பட்டு வரலாற்றில் முதல் முறையாக ஒரு தலித் அமைச்சருக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என முன்பு மிகப்பெரிய அளவில் பாஜகவினர் பிரச்சாரம் செய்தார்கள். அண்ணாமலை டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து அமலாக்கத்துறையை களத்தில் இறக்கி திடீரென செந்தில் பாலாஜியை கைது செய்தனர். செந்தில் பாலாஜிக்கு எதிராக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய எதிர் பிரச்சாரம் நடத்தப்பட்டது.
கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி இருந்தால் பாஜகவை ஜெயிக்க விடமாட்டார் என நடத்தப்பட்ட திட்டம் அது. அதை மீறி சிறையில் இருந்தாலும் பாஜகவின் திட்டத்தை தனது வியூகத்தால் முறியடித்தார் செந்தில் பாலாஜி. இப்போது அதற்கு வெகுமதியாக அவரை மீண்டும் அமைச்சராக்கியுள்ளனர். அதே துறை அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் எதிர்காலத்தை நோக்கி திட்டமிடப்பட்ட ஒரு அமைச்சரவை மாற்றமாக இது நடந்துள்ளது.
கேள்வி: வாரிசு அரசியலுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு திமுக என பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்களே?
பிரகாஷ்: அதிமுகவில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு தலைமைப் பொறுப்புக்கு வந்தது யார்? இது வாரிசு அரசியல் இல்லையா? அவர் நிலைக்கவில்லை என்றாலும், தலைமைப் பதவிக்கு வந்தாரா இல்லையா? பாஜகவில் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ தலைவராகிறார், அதன் பிறகுப் ஐசிசி தலைவராகிறார். அவருக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா? பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரின் மகன்களும் அரசியலுக்கு வந்துள்ளனர்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் செய்யாத செயல்பாடே கிடையாது. முழுக்க முழுக்க அதிமுகவை இயக்குவது மிதுன் தான். நேரடியாக அவரை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எஸ்.பி.வேலுமணியின் மகன் தான் அவரது எல்லா தொழில் முதலீடுகளையும் பார்த்துக் கொள்கிறார்.
உதயநிதி ஸ்டாலினை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுத்தது மக்கள். பிறகு அவர் அமைச்சர் ஆக்கப்பட்டார். அதற்கு திமுகவின் அத்தனை எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்போது அதில் இருந்து சிறிய புரொமோஷனாக துணை முதல்வர் ஆகியுள்ளார். அரசியலமைப்பில் இல்லாத பதவி, அந்த பதவிக்கு எந்த பெரிய அதிகாரங்களும் இல்லை. அது முதல்வர் ஸ்டாலினின் சாய்ஸ்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications