அதிமுக பிளான் தோல்வி.. விக்கிரவாண்டியில் நடந்தது என்ன? புட்டுப் புட்டு வைக்கும் பத்திரிகையாளர்!
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் என்ன சொல்கிறது என்பது தொடர்பாக தனது பார்வையை முன்வைத்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதிமுக, தேமுதிக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ரிசல்ட் அலசல்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், 67 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாமக வேட்பாளர் சி அன்புமணி 56296 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,602 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.
அதிமுகவினரின் ஓட்டுகளை பெற நாம் தமிழர் மற்றும் பாமக இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், முடிவுகளை அலசினால், அதிமுக ஓட்டுகளையும் திமுக அதிகமாக பெற்றுள்ளது தெரியவருகிறது. இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். இனி பேட்டியை பார்க்கலாம்.
கேள்வி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2026 சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டம் என்று கருதலாமா? அல்லது தலைகீழ் மாற்றம் நடக்கவும் வாய்ப்புள்ளதா?
ப்ரியன்: இடைத்தேர்தல் முடிவுகள் தான் பொதுத்தேர்தலில் பிரதிபலிக்கும் என்று சொல்ல முடியாது. இன்னும் 2 ஆண்டு காலம் இருப்பதால் கூட்டணிகள் மாறலாம், என்ன நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நாளையோ, அடுத்த மாதமோ தேர்தல் என்றால் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனச் சொல்லலாம். ஆனால், 2 வருடங்கள் இருப்பதால் அரசுக்கு எதிரான விஷயங்கள் நடக்கும்போது கள நிலவரம் மாறலாம்.
திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி எப்படி திரட்டப்பட்டதோ, அதுபோல, திமுகவை தோற்கடிக்க கட்சிகள் ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கட்சிகள் மத்தியில் தலை தூக்கி உள்ளது. அதற்கான முன்னெடுப்பை விக்கிரவாண்டியில் எடுத்தார்கள். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து விட்டது. அதனால் இனி என்ன முடிவு எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது.
கேள்வி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட பிரச்சனைகள் தேர்தல் நெருக்கத்தில் ஏற்பட்ட போதும், திமுக பெரிய வெற்றியை பெற்றது எப்படி? பணம் கொடுத்து ஓட்டுகளை பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே..?
ப்ரியன்: ஆளுங்கட்சி வெற்றி பெற்றதற்கு பணம் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட மிகப்பெரிய பணக்காரர்கள் அதிக பணம் செலவழித்தும் தோல்வி அடைந்தனர். பணம் மட்டுமே வெற்றியை தீர்மானிப்பதில்லை. வேட்பாளர், அப்போதைய அரசியல் சூழல், கூட்டணி என பல காரணிகள் உள்ளன. பணம் வாங்கிக்கொண்டு எதிர் தரப்புக்கு வாக்களிப்பவர்களும் இருக்கிறார்கள். அரசின் சாதனைகளும் வெற்றியை தீர்மானிக்கும். இந்த முறை பெண்களுக்கான திட்டங்கள் திமுகவுக்கு சாதகமாக திருப்பி இருப்பதாகத் தெரிகிறது.
அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பலர், பாமக, பாஜக கூட்டணியில் இருப்பதால் அக்கட்சிக்கு வாக்களிக்காமல் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இடைநிலைச் சாதிகளைச் சார்ந்தவர்கள், பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட விரல் உதயசூரியனுக்கு போடாது என்ற நிலை மாறியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் ப்ரியன்.
-
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications