அது அவ்வளவுதான்.. சோலி முடிஞ்சது.. விஜய் குடுமி அமித்ஷா கையில்.. அடுத்து இதுதான் நடக்க போகுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் யாருக்கும் வெற்றி இன்றி தொங்கு சட்டசபை உருவாகி உள்ள நிலையில் தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் பாரதி தம்பி குறிப்பிட்டு உள்ளார். முக்கியமாக திமுக - அதிமுக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் அவர் போஸ்ட் செய்துள்ளார்.

அவர் செய்துள்ள போஸ்டில், திமுக - அதிமுக கூட்டு ஒரு காலத்திலும் நடக்க வாய்ப்பே இல்லை. நீ ரெண்டரை வருசம், நான் ரெண்டரை வருசம்னு முதலமைச்சர் பதவியை பகிர்ந்துகிட்டா, அமைச்சரவை எப்படி அமைக்கிறது? இங்கேருந்து பாதி பேரு, அங்கேருந்து பாதிப்பேருன்னு நிரப்புறதா? திமுக காரங்களும், அதிமுக காரங்களும் ஒரே அமைச்சரவையை ஷேர் பண்ணிக்கிட்டு ஒண்ணும் மண்ணுமா இருக்கனுமா? சொல்லும்போதே கருவாட்டு சாம்பார் மாதிரி இருக்கு...

சரி, இது வேண்டாம். வெளியே இருந்து அதிமுக-வுக்கு திமுக ஆதரவு தரும், அவங்களே முழு ஆட்சியை நடத்துவார்கள் என்றால் அது இன்னும் சிக்கல். எடப்பாடியை முதல்வர் ஆக்கிட்டு திமுக என்ன ரோல் பண்ணும்? எடப்பாடி ஆட்சி சூப்பர்னு சொல்லுமா? இதெல்லாம் அந்த திமுக-வின் Existence-யையே இல்லாமல் செய்துவிடும். அதனால் இதில் நம்பக்கூடிய தர்க்கம் இல்லை.

Senior Journalist says TVK Vijay may not form government with Congress but AIADMK

ஆனால் வேறொரு தர்க்கம் உள்ளது. இப்போது காங்கிரஸ் தவெக-வுடன் போய்விட்டது. 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் இவர்களின் கூட்டணி தொடரும். விஜய்-க்கு இப்போதுள்ள செல்வாக்கு தொடர்ந்தால் 2029-ல் காங்கிரஸ் கணிசமான வெற்றியை ஈட்டும். விஜய் செல்வாக்கு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அருகமை மாநிலங்கள் வரையிலும் எதிரொலிப்பதால் தென்னிந்தியாவில் காங்கிரஸ் மீண்டும் பலம் பெறும். இந்த சூழலை பாஜக விரும்பாது. அதனால் தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என அது நினைக்கும். பாஜக-வின் விருப்பத்தை தாண்டி, அதிமுக, தவெக-வுக்கு ஆதரவு தர இயலாது. கட்சியை உடைப்பதற்கும் பாஜக அனுமதிக்காது. அப்போ என்ன செய்யும்?

விஜய் ஆட்சி அமைக்கவே முடியாது

விஜய் ஆட்சி அமைக்க முடியாத சூழலை உருவாக்கும். இப்போதைய நிலையில் அவரால் ஆட்சி அமைக்கவும் முடியாது.

தவெக -108-2=106
காங்கிரஸ் = 5
மொத்தம் =111.
தேவை இன்னும் 7.

விசிக, கம்யூனிஸ்டுகள் போனாலும் ஆறு பேர்தான் தேறும். அப்படியும் ஒண்ணு குறையும். ஒருவேளை பிரேமலதா போனால் அந்த ஒன்று சமமாகும். ஆனால் பிரேமலதா போக மாட்டேன் என உறுதியாக சொல்லிவிட்டார். இரண்டு இடங்களை வைத்துள்ள IUML நிச்சயம் போக மாட்டார்கள்.

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக, அமமுக என யாரை வேண்டுமானாலும் இழுக்கலாம். வருவதில் அவர்களுக்கு ஒன்றும் சிக்கல் இல்லை. ஆனால், காங்கிரஸ் அங்கே போன பிறகு நிலைமை மாறிவிட்டது. NDA அணியில் உள்ள யார் ஒருவரும் விஜய் பக்கம் செல்வதை பாஜக விரும்பாது. எல்லோர் குடுமியும் அமித்ஷா கையில் இருப்பதால் யாராலும் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் முடியாது. அதனால் இது எதுவும் இப்போதைக்கு சாத்தியம் இல்லை.

அப்போ என்ன நடக்கும்? வேறு வழிகளில் ஆட்சி அமைக்கவே முடியாது என்ற நிலையை பாஜக உருவாக்கும். அதனால்தான் இந்த நேரம் பார்த்து கவர்னர் கேரளாவுக்குப் போயிருக்கிறார். கான்வாயை வாபஸ் வாங்கியிருக்கிறார்கள்.

எல்லா வழிகளிலும் முட்டிமோதி ஒண்ணும் முடியாது என்ற சூழல் வரும்போது பாஜக-வின் சொல்படி கேட்கும் நிலை உருவாகும். அப்போ பாஜக வைக்கும் நிபந்தணை, 'காங்கிரஸை வெளியேற்றுங்கள். நாங்க உங்களுக்கு 15 பேரோ, 20 பேரோ ரெடி பண்ணி தர்றோம்'.

அதைக் கேட்பதைத் தவிர விஜய்-க்கு ஆப்ஷன் இருக்காது. இல்லன்னா Floor test-ஐ சந்தித்து ஆட்சியை இழந்து தேர்தலை சந்திக்கனும். என்னதான் அனுதாப அலை வந்து மீண்டும் விஜய் ஜெயிப்பார் என்ற நிலை இருந்தாலும் அதெல்லாம் மிகப்பெரிய ரிஸ்க். நிச்சயம் அதை நோக்கிப் போக வாய்ப்பு இல்லை. So, காங்கிரஸ் வெளியேற்றப்பட்ட பின்பு, அதிமுக-வை அப்படியே தூக்கிட்டுப் போய் விஜய்-க்கு விருந்து வைக்கிறதா, இல்ல... சி.வி.சண்முகம், வேலுமணி மாதிரியான ஆட்களை வெச்சு கட்சியை உடைச்சு கொண்டு போறதான்றதை எல்லாம் அந்த நேரத்தில் அமித்ஷா முடிவு செய்வார்.

அப்போ காங்கிரஸ் நிலைமை? அவ்வளவுதான். சோலி முடிஞ்சிரும்.

இந்த கேம் பிளான் செயலுக்கு வரும்வரை, பாஜக-வின் மிரட்டலுக்கு அடிபணியும் தங்கள் கோழைத்தனத்தை மறைக்க திமுக அதைச் செய்யுது, இதைச் செய்யுது என்று தினம் ஒன்றாக கிளப்பிவிடுவார்கள். மடக்கு ஊதிகள் நிறைந்த கட்சி என்பதால் என்ன, ஏது என பரிசீலிக்காமல் அதை நம்பவும் செய்வார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+