சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"காவி" நெடுமாறன்?.. ஆர்எஸ்எஸ் உருவாக்கிய "செல்லக் குழந்தை" தமிழ்தேசியம்.. கொந்தளிக்கும் திமுக? ஏன்?

பழ நெடுமாறனை திமுகவினர் சரமாரியாக விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனை, திமுகவினர் சிலர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.. என்ன காரணம்?

தமிழக அரசியலில் சீனியர் பழ. நெடுமாறன்.. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தந்ததன்மூலம் பரவலாக அறியப்பட்டவர்..

ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ் ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றியவர்.. கருத்து வேறுபாடு காரணமாக, அங்கிருந்து விலகி, காங்கிரஸ் பேரியக்கத்தை தோற்றுவித்தார்.,. அடுத்து, தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து வருபவர்.. எனினும், இந்துத்துவா போக்கை அடியோடு வெறுப்பவர்..

 இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு

இந்தி திணிப்பாகட்டும், சமஸ்கிருத திணிப்பாகட்டும், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளாகட்டும், எதுவாக இருந்தாலும் தன்னுடைய எதிர்ப்பை ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்து வருபவர்.. அந்த வகையிலும் பழ.நெடுமாறன் மீது அனைத்து திராவிட கட்சிகளுமே மிகுந்த மரியாதை வைத்து வருகிறது. இந்நிலையில், திடீரென ஒரு நிகழ்வு நடந்து, பழ.நெடுமாறனை விமர்சிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது..

 பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடந்தபோது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பழ.நெடுமாறனும் பங்கேற்றனர்... ஆனால், பாஜகவினர் இதில் பங்கேற்றதால், தமிழ்தேச அமைப்புகளம், பெரியார் இயக்கங்களும் இதில் கலந்து கொள்ளவில்லை.. இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருந்தார்.. இது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், பழ.நெடுமாறன் பேசியதுதான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

 பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன்


ராஜபக்சே விவகாரம் குறித்து பேசி கொண்டிருந்தவர், டக்கென பக்கத்தில் இருந்த அண்ணாமலையை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்.. அவர் பேசும்போது, "இலங்கை விவகாரம் சர்வதேச பிரச்சனையாக கூடிய வாய்ப்பு உள்ளன.. இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி நிற்கிறது... இது இந்தியாவுக்குதான் ஆபத்து.. இலங்கை பிரச்சனையை எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி ஆழமாக புரிந்து கொண்டு பேசினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை... அவர் ஐபிஎஸ் என்று கேள்விப்பட்டேன்...

ராஜதந்திரம்

ராஜதந்திரம்

ஆனால், வெளியுறவுத் துறை அதிகாரி போல இலங்கை பிரச்னையை பற்றி தெளிவான புரிதலுடன் பேசினார். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை... பொறுமையும், பெருந்தன்மையும் அண்ணாமலைக்கு அதிகம் உள்ளது... பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்க தலைவர்... தமிழர், சிங்களர் வேறுபாடு இல்லாமல் இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி அள்ளி கொடுத்திருக்கிறார்" என்று பேசியிருந்தார்.

 பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன் இப்படி பேசியதுதான், அரசியல் கட்சிகளுக்கு தூக்கி வாரிப் போட்டுள்ளது.. இலங்கை பிரச்சனையை மட்டும் பேசுவார் என்று பார்த்தால், அண்ணாமலையை சேர்த்து பாராட்டி உள்ளாரே? என்ற அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.. பழ.நெடுமாறனுடன் திமுகவுக்கு எப்போதுமே பெருமளவு நெருக்கமான போக்கு இல்லை என்றாலும்கூட, கருணாநிதியுடன் பழ.நெடுமாறனுக்கு எப்போதுமே ஏழாம் பொருத்தம் என்றாலும்கூட, தற்போதைய செயல்பாடு, திமுகவினருக்கு எரிச்சலையும், அதிருப்தியையும் கூட்டி உள்ளதாக தெரிகிறது.

அப்துல்லா

அப்துல்லா

காரணம், சமீப காலமாகவே, அதிமுகவை விட, திமுகவை அதிகம் சீண்டி கொண்டிருப்பதும், விமர்சித்து கொண்டிருப்பதும் அண்ணாமலைதான்.. அவரை இப்படி திடீரென பழ.நெடுமாறன் புகழ்ந்துள்ளாரே என்றுதான் டென்ஷனாகி உள்ளனராம்.. இதுகுறித்து திமுகவின் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் செயலாளரான அப்துல்லா வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார்.. தமிழ் தேசியம் என்பது ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய "செல்லக் குழந்தை" என்று நாங்கள் சொன்ன போது மறுத்தவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?.. அது இப்போது உறுதியாகி விட்டது" என்று தன்னுடைய ஃபேஸ்புக் பதிவிலேயே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
senior leader pazha nedumaran praises bjp tn leader annamalai and dmk criticizes பழ நெடுமாறனை திமுகவினர் சரமாரியாக விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X