தமிழக அரசியலை புரட்டிப்போடுமா.. இன்று வெளியாகப்போகும் ஷாக்கிங் வீடியோக்கள்.. உளவுத்துறை வார்னிங்
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு முந்தைய தினம் பரபரப்பு வீடியோ வெளியானதை போல, இன்றும் சில வீடியோக்கள் வெளியாக உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன், அதிமுக மற்றும் திமுக நடுவே கடுமையான போட்டி இருந்தது. ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து, அவரது தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் என்பதால், அவர் மர்மமாக மரணம் அடைந்ததாக சொல்லப்பட்ட விவகாரம் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அம்சமாக இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில்தான், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா ஜூஸ் அருந்துவது போன்ற ஒரு வீடியோ, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலால் வெளியிடப்பட்டது.

ஜூஸ் குடித்த ஜெயலலிதா
இதன் மூலம் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில், ஜூஸ் அருந்தும் நிலையில்தான் இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றிதான், மரணமடைந்தார் என்ற செய்தி மறைமுகமாக வாக்காளர்களுக்கு சொல்லப்பட்டது. அந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. இருப்பினும், அத்தேர்தலில் தினகரன்தான் வெற்றி பெற்றார்.

இப்போதும் கடும் போட்டி
இந்த வீடியோ வெளியீடு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் கூட, இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது லோக்சபா தேர்தலிலும் அனல் பறக்கும் பலமுனைப் போட்டி நிலவுவதால், இன்று இரவுக்குள் சில பரபரப்பு வீடியோக்களை சில கட்சியினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உளவுத்துறை தகவல்
எந்த கட்சியினர், எந்த கட்சிக்கு எதிராக இந்த வீடியோக்களை வெளியிட போகிறார்கள், என்ற தகவல் இல்லை என்றாலும், இப்படியாக சில வீடியோ வெளியாகப் போகிறது என்பதை மாநில உளவுத்துறை முன்கூட்டியே அரசுக்கு எச்சரித்துள்ளதாக சில கட்சிகளின் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு
தமிழக வாக்காளர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ இருக்கும் என கூறப்படுகிறது. ஷாக்கிங் வீடியோக்கள், வெளியாக போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறிப் போயுள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications