விரைவில் கைதாகும் செந்தில் பாலாஜி? கைவிட்ட ஹைகோர்ட்! டாஸ்மாக் ஊழல் வழக்கில் இறுகும் பிடி! பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எதனடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது? எதனடிப்படையில் முன் ஜாமீன் கோருகிறீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த விவகாரத்தில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது என கூறியுள்ளார்.

திமுக ஆட்சியில் மிகுந்த செல்வாக்கு கொண்ட அமைச்சராக வலம் வந்தவர் கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி. தற்போது தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திலிருந்து அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருகிறது.

Senthil Balaji Bail TASMAC

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் 1000 கோடி மோசடி, டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு என பல்வேறு வழக்குகள் தூசு தட்டப்பட்டு தற்போது விசாரணையில் இருக்கிறது. இதற்கிடையே தமிழக வெற்றி க் கழக அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி, அவர் தம்பி அசோக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது முன் ஜாமீன் பெற்ற அவர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று தமிழக முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, 9 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையே செந்தில் பாலாஜியின் வீட்டிலும், அவர் தங்கி இருந்த நட்சத்திர ஹோட்டலிலும் சோதனை நடைபெற்றது. அப்போது அவரிடம் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை செந்தில் பாலாஜி மறுத்திருந்தார்.

இதற்கிடையே டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி முன்ஜாமின் வழங்க வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு எம்பி - எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது முறைகேடு நடந்ததாக கூறுவதில் டாஸ்மாக் நிறுவனத்துக்கோ அல்லது செந்தில் பாலாஜிக்கோ எந்த தொடர்பும் இல்லை எனவும், இது தொடர்பான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன் செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை முன்வைத்தது.

அப்போது, செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என சொன்ன நீதிபதி, எதனடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது? எதனடிப்படையில் முன் ஜாமீன் கோருகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி மீதான தற்போதைய குற்றச்சாட்டு என்பது பெரும் பனிப்பாறையின் நுனி போன்றது தான் என காவல்துறை வாதிட்ட நிலையில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது எனவும், இந்த விவகாரத்தில் பல நூறு கோடி ரூபாக்கு முறைகேடு நடந்துள்ளது. அதற்கான உரிய ஆதாரங்கள் உள்ளன காவல்துறை கூறியது. இதனையடுத்து டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+