குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டோம்.. ஜாமீன் கோர முடியாது.. செந்தில் பாலாஜி தரப்பை அதிரவைத்த ED
சென்னை: அமலாக்கத்துறை வழக்கை பொறுத்தவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வேண்டும் என கோர முடியாது என்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறை பரபரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வரும் 20ஆம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது, "செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது. சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் வருமான வரியை தாக்கல் செய்துள்ளார். சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்?
வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது . செந்தில் பாலாஜிக்கு தற்போது இருக்கும் உடல்நிலைப்படி 30 நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்கவே முடியாது. எங்கும் தப்பித்து ஓடாமல் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர் கொள்வார். 3,000 கோடி முதல் 20,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை.

அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டுள்ளதால் கலைக்க முடியாது." என வாதங்களை முன்வைத்துள்ளார். இதற்கு பதில் வாதம் வைத்த அமலாக்கத்துறை, "வருமானவரி கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தவறு செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. முழுமையான விசாரணையில்தான் அது தெரியவரும். வேலை வேண்டும் என பணம் கொடுப்பவர்கள் வங்கி வாயிலாக பணம் கொடுக்கமாட்டார்கள்.

அமலாக்கத்துறை வழக்கை பொறுத்தவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வேண்டும் என கோர முடியாது. செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராகத்தான் உள்ளார். சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபராக உள்ளார். எனவே, அவர் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. ஜாமீன் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் கிடையாது. அமலாக்கத்துறை வழக்கில் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களும் இருக்கிறார்கள்" என வாதம் முன்வைக்கப்பட்டது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications