முடிஞ்சிடுச்சு.. செந்தில் பாலாஜி வெளியே வரவே முடியாது.. பெயில் கிடைக்காதாமே.. அடித்து சொல்லும் "தலை"
சென்னை: இனி செந்தில் பாலாஜி பெயில் கேட்க முடியாது அவரு பெயில் கிடைக்காது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அவரை கைது செய்தனர்.

5 நாட்கள் விசாரணை: இந்த வழக்கில்தான் அமலாக்கத்துறை மூலம் செந்தில் பாலாஜி கஸ்டடி எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார். இதுவரை 5 நாட்கள் விசாரணை முடிந்துள்ளது. கடந்த 5 நாட்களாக அவரிடம் தீவிரமாக கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 3000 பக்க விசாரணை அறிக்கையை ட்ரங்க் பெட்டி ஒன்றில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விசாரணையில் கூறிய விஷயங்கள் கூற மறுத்த விஷயங்கள் ஆகியவை எல்லாம் மொத்தமாக டைப் செய்யப்பட்டு அதன் முடிவுகளும் விவரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி தம்பி: இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பிய அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இனி செந்தில் பாலாஜி பெயில் கேட்க முடியாது அவரு பெயில் கிடைக்காது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
பேட்டி: இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட போதே அதை செந்தில் பாலாஜி நேரடியாக சென்று எதிர்கொண்டு இருக்கலாம். அப்போதே விசாரணைக்கு ஆஜராகி இருந்தால் இந்த அளவிற்கு போய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அண்ணாமலையை எதிர்க்கிறோம், பாஜகவை எதிர்க்கிறோம் என்று தீவிர அரசியல் செய்யும் செந்தில் பாலாஜியை முடக்க பாஜக எது வேண்டுமானாலும் செய்யும். அவருக்கு பாஜக, அண்ணாமலை, அதிமுக என்று பல எதிரிகள் இருக்கிறார்கள். அப்படி இருக்க செந்தில் பாலாஜி விசாரணையை எதிர்கொள்ளாமல் உள்ளே இருப்பது அதிர்ச்சியை தருகிறது.
செந்தில் பாலாஜி இப்படி எதிரிகளை சம்பாதித்து என்ன செய்ய போகிறார். அவர் அமைச்சராக இருந்தவர். இப்போது பாருங்கள் சிறையில் எப்படி இருக்கிறார் என்று. அவரின் தோற்றத்தை பாருங்கள். இனி ஒவ்வொரு நொடியும் அவருக்கு திக் திக் என்றுதான் இருக்கும்.

எல்லாம் இருந்தும் அவர் அநாதை போல ஆகிவிட்டார். அந்த 5 நாள் மிக முக்கியம். அவர் இதில் என்ன சொல்லி இருப்பார் என்பது மிக முக்கியம். கண்டிப்பாக அவர் 50 சதவிகிதமாவது சொல்லி இருப்பார். கண்டிப்பாக முரண்டு பிடித்து இருக்க மாட்டார்.
அவரை சரண்டர் செய்த அதே நாளில் அவர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அப்படி என்றால் அமலாக்கத்துறை எவ்வளவு வேகமாக செயல்பட்டு இருக்கிறார்கள். பழைய வழக்கில்.. பழைய வேலைவாய்ப்பு வழக்கில் கூட இப்போது புதிதாக கட்டும் வீட்டை சேர்த்து உள்ளனர். அந்த அளவிற்கு அமலாக்கத்துறை வேகமாக இருக்கிறது.
அவர்கள் சார்ஜ் சீட் போட்டுவிட்டனர். இனி செந்தில் பாலாஜி பெயில் கேட்க முடியாது. பெயில் கிடைக்காது. 60 நாட்களுக்கு முன்பாக சார்ஜ் சீட் போட்டுவிட்டதால் அவருக்கு பெயில் கிடைக்காது. அசோக் வெளியே தலைமறைவாக இருப்பதால் அதை சொல்லியே பெயிலை மறுப்பார்கள். செந்தில் பாலாஜி தரப்பால் இனி எதுவுமே செய்ய முடியாது.
-
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications