அஸ்திவாரமே அசையுதே.. "சிக்கியது" ஆதாரம்.. செந்தில் பாலாஜி மேட்டரில் கலங்கும் "தலைகள்".. விடாது டெல்லி
சென்னை: செந்தில் பாலாஜி விவகாரம், இனிமேல்தான் சூடுபிடிக்க போகிறதாம்.. அதற்கான அடுத்தடுத்த அதிரடிகள் ஆரம்பமாகி உள்ளன.. இதுகுறித்து சில தகவல்கள் நமக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளன.
எதற்கும் அசையாத அமைச்சர் செந்தில் பாலாஜியையே, அமலாக்கத்துறை கைது செய்துவிட்ட நிலையில், திமுக அமைச்சர்களிலேயே சிலருக்கு கிலி சூழ்ந்தபடி உள்ளது.
கிலியில் தலைவர்கள்: ஏற்கனவே, டெல்லி டார்கெட் செய்யப்பட்ட லிஸ்ட்டில் மொத்தம் 5 திமுக அமைச்சர்கள் இருப்பதாகவும், அதிலும், 2 அமைச்சர்கள் பெயர் டாப்பில் உள்ளதாகவும் சொல்லப்பட்டது..

ஒருவர் கொலை முயற்சி வழக்கில் சிக்கியவராம்.. மற்றொருவர் பொறியியல் கல்லூரி வைத்து நடத்தி வருவராம்.. அதனால், இவர்கள் எந்நேரமும் வருமான வரித்துறை, அமலாக்கத் துறையினரின் வளையத்துக்குள் வரக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதுபோக பவர்புல் அமைச்சர் ஒருவரிடம் அடுத்த குறி பாயலாம் என்கிறார்கள்.
நடவடிக்கை: எனினும் இப்போதைக்கு அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டாம், சற்று பொறுமை காக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதா. எனவே, அக்டோபர் மாதத்திற்கு முன்பாகவே, அந்த நபர் மீதான நடவடிக்கை என்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, செந்தில்பாலாஜி வழக்கிலேயே இன்னும் அதிரடிகள் வரப்போவதாக சொல்கிறார்கள்.. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கிலேயே, மேலும், 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.. இதில் அரசு "பிஆர்ஓ-க்கள்" சிலரும் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது.. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார், தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இவர்கள் அனைவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஸ்பீடு அதிகம்: வழக்கை விரைந்து விசாரித்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவு பிறப்பித்த நிலையில், அது தொடர்பான வேகமும் அதிகரித்துள்ளது.
இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதால்தான் அமலாக்கத்துறையும் உள்ளே நுழைந்துள்ளது. அந்த வகையில் செந்தில்பாலாஜியை கைது செய்த அமலாக்கத் துறை, வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. செந்தில் பாலாஜியோடு சேர்த்து குற்றம்சாட்டப்பட்ட அந்த அரசு அதிகாரிகள் இப்போதும் அரசு பணியில் இருந்து வருவதால், மிகுந்த கலக்கத்தில் இருந்து வருவதாக தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு ஸ்பெஷல் செய்தி நமக்கு கிடைத்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறையின் நடவடிக்கையின் அடுத்தக்கட்டமாக, சட்டவிரோத பார்கள் நடத்தப்பட்ட விவகாரத்தில் நிறைய ஆவணங்கள் கிடைத்துள்ளதாம்..
ஆவணங்கள் ரெடி: அதேபோல, டாஸ்மாக் நிறுவனத்தின் குடோன்களுக்கு செல்லாமல் மதுபான ஆலைகளிலிருந்து அந்த பார்களுக்கும், சில்லரை விற்பனை கடைகளான டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்ட விவகாரத்திலும், நிறைய ஆவனங்களை சேகரித்திருக்கிறதாம் அமலாக்கத்துறை.
அதுமட்டுமல்ல, இந்த விவகாரத்தில் செந்தில்பாலாஜியிடம் தொடங்கி அது சபரீசன் வரை நீள்கிறதாம் அந்த ஆவணங்கள். எனவே, அந்த ஆவணங்கள் அனைத்தையும் மையமாக வைத்து, சம்மந்தப்பட்ட மதுபான ஆலைகளின் உரிமையாளர்களிடம் விசாரிக்கவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாம்.. இந்த விஷயம் தெரிந்து, தமிழக மதுபான ஆலை தொழிலதிபர்களும் கலக்கத்தில் இருக்கிறார்களாம்..!!
ஏற்கனவே, டெல்லி எடுக்க போகும் "மூவ்"களினால், சில முக்கிய அமைச்சர்கள் பீதியில் உள்ளதாக சொல்கிறார்கள்.. இதுபோக அரசு அதிகாரிகள் சிலரும், சம்மன் அனுப்பிவிட்டால் என்ன செய்வது என்ற பீதியில் உறைந்துள்ளனர்.. அதிமுகவோ, சத்தமே இல்லாமல் கப்சிப் மோடுக்கு போய்விட்டது. இந்த லிஸ்ட்டில், தற்போது மதுபான ஆலை தொழிலதிபர்களும் சேர்ந்துள்ளனர்.. ஆக மொத்தம் எல்லா பக்கமும் ஒருவித "கலக்கம்" கவ்விக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications