ஐசியூ-வில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி.. அறை எண் 435ல் தீவிர கண்காணிப்பு!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் குழு பரிந்துரைத்தது.
இதையடுத்து கோர்ட்டில் முறையிட்டு, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, கடந்த 21ஆம்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் இதயத்திற்கு செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் விதமாக தொடர்ந்து 4 மணி நேரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதையடுத்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதயத்தில் அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் ஐசியுவில் செந்தில் பாலாஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, உடல்நிலை சீராக உள்ளதால், வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவேரி மருத்துவமனையின் 7வது தளத்தில் உள்ள ஐ.சி.யூவில் இருந்து 4-வது தளத்தில் உள்ள தனி அறையில் மாற்றப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அறை எண் 435ல், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ள நிலையில், தொடர்ந்து அவரது உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications