ஜெயிலில் இருந்தால் என்ன.. தேர்தல் வேலைகளில் காலை வைத்த செந்தில் பாலாஜி.. அட.. இப்படி ஒரு முடிவா?
சென்னை: செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் திமுகவை ஜெயிக்க வைப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம்.
சமீபத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 21வது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜி வழக்கு; இதனிடையே, செந்தில் பாலஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த முறை புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி D.V. ஆனந்த் முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த இரண்டு வாரம் முன் விசாரணை; அதன்பின் இரண்டு வாரம் முன் இதில் விசாரணை நடந்தது. அப்போது 21வது முறையாக அவரின் காவல் நீட்டிக்கப்பட்டது. கடந்த விசாரணையின் போது, பி.எம்.எல்.ஏ-வின் கீழ் 230 நாட்கள் சிறையில் இருந்தும் அவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும் என்று நீதிபதி கேட்டிருந்தார்.
சிறையில் அடைப்பு: 48 மணி நேரத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டால், அரசின் கடைசி தர ஊழியர் கூட சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும்போது, இவ்வளவு காலம் சிறைவாசத்திற்குப் பிறகும் ஒருவரை எப்படி அமைச்சரவையில் தொடர அனுமதிக்க முடியும் என்று நீதிபதி ஆச்சரியப்பட்டார்.
"அரசு ஊழியர் விஷயத்தில் காட்டப்படும் கடுமை இப்படி இருக்கும்போது, சிறைக்குள் இருக்கும் போது, இலாகா இல்லாமல் அமைச்சராகத் தொடரும் ஒருவர் இங்கே இருக்கிறார். என்ன வேடிக்கை இது. நீங்கள் பொதுமக்களுக்கு என்ன வகையான செய்தியை வழங்குகிறீர்கள்? என்று அமைச்சர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யம சுந்தரத்திடம் நீதிபதி கேட்டார். கடந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
இதில் அமலாக்கத்துறை வைத்த வாதத்தில், சகோதரர் அசோக் குமார் தலைமறைவாக உள்ளார். அவர் இப்படி மறைவாக உள்ள நிலையில் எப்படி செந்தில் பாலாஜியும் ஜாமீனில் வெளியில் வர முடியும்.
அவர் வந்தால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும். காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற காரணத்தை எப்படி ஜாமீனுக்கு காரணமாக சொல்ல முடியும். அதை மட்டும் அடிப்படையாக வைத்து தொடர்ச்சியாக ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியாது. காலம் கடக்கிறது என்றால்.. வழக்கை துரிதப்படுத்தலாம். அவர் ஒரே காரணத்தை வைத்து மீண்டும் மீண்டும் ஜாமீன் கேட்கிறார். அதை எப்படி கொடுக்க முடியும், என்று செக் வைத்தனர். இதனால் செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவே இல்லை.
தேர்தல் வேலை: அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் திமுகவை ஜெயிக்க வைப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம்.
அதன்படி தன்னை சந்தித்த சிலர் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான தகவல் ஒன்றை அனுப்பி உள்ளாராம் செந்தில் பாலாஜி. அதில்.. கரூரில் நாம்தான் ஜெயிக்க வேண்டும். கரூரில் இந்த முறை திமுகவே நிற்கட்டும். இப்போது கூட்டணி கட்சியிடம் உள்ள இடம் திமுகவிற்கு வந்தால் நாம் ஜெயிக்கலாம்.
தேர்தல் பணிகளை எனக்கு நெருக்கமானவர்கள் பார்த்துக்கொள்வார்கள். திமுகவில் சரியாக இருக்கும் சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டு செந்தில் பாலாஜி தலைமைக்கு தகவல் அனுப்பி உள்ளாராம். கொங்கு அரசியலை கரைத்து குடித்தவர் என்பதால் செந்தில் பாலாஜியின் ஆலோசனைகளை திமுக பரிசீலனை செய்து வருகிறதாம்
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications