காலைல இருந்து வீட்டில் இருந்த அமலாக்க துறை! கைதுக்கான காரணம் செந்தில் பாலாஜிக்கு தெரியுமே! நீதிபதி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கைதுக்கான காரணங்கள் தெரியும் என நீதிபதி கார்த்திகேயன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு 3ஆவது நீதிபதி கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை இரு தினங்களாக விசாரித்த கார்த்திகேயன் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கைது காரணங்களை பெற மறுத்து விட்டு, தரவில்லை என முன்வைத்த வாதம் நிராகரிக்கப்படுகிறது. கைது செய்ய அதிகாரம் உள்ளது என்றால் காவலில் எடுத்து விசாரிப்பதும் அனுமதிக்கத்தக்கது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. அமர்வு நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பிறகு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யும் வரை புலன் விசாரணை தொடரலாம். சிகிச்சை காலத்தை காவலாக கருத முடியாது. முதல 15 நாட்களுக்கு பிறகு அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்கலாம்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாகக் கருத முடியாது. கைதுக்கான காரணங்கள் செந்தில் பாலாஜிக்கு தெரியும். அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை முதல் இருந்துள்ளனர். பிறகு எப்படி கைதுக்கான காரணம் தெரியாமல் போகும்.
அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யும் போது செந்தில் பாலாஜி வழக்கு தொடரவில்லை. இந்த வழக்குப்பதிவை எதிர்க்காத செந்தில் பாலாஜி அதன் பிறகு வரும் சோதனை, விசாரணையை எதிர்க்க முடியாது. அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியும் சில முறை மட்டுமே செந்தில் பாலாஜி ஆஜராகியுள்ளார். செந்தில் பாலாஜியின் கைதும் நீதிமன்றக் காவலும் சட்டப்பூர்வமானது. எனவே ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல.
அமலாக்கத் துறை கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி இல்லை. அவர் சிகிச்சையில்தான் இருந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜி சட்டத்தை மதிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜி சட்டத்திற்குள்பட்டவர்தான். விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த தடையையும் கோர முடியாது. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
செந்தில் பாலாஜி குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டும். செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமாகிறது என நீதிபதி தெரிவித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications