“மின்சாரம் கட் ஆனதை விட வந்த 2 விளக்கத்தில் தான் பல்பு ஃபியூஸ் போச்சு”.. செந்தில் பாலாஜி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின் வெட்டு ஏற்பட்டது குறித்து, "ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என அமைச்சர் சொல்கிறார்.. மின் வாரியத்தின் தரப்பிலோ மின் தடை என கூறப்பட்டுள்ளது" எனச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

மதுரையில் மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கலந்துகொண்ட அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. மின்சாரத் துறை அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்த போதே மின்சாரம் தடைபட்டதால், அரங்கத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Senthil Balaji Questions Power Cut at CTR Nirmal Kumar Event Points to Contradictory Claims

தமிழ்நாடு முழுவதும் சமீபமாக அதிகளவில் மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தவெக மின்சாரத் துறை அமைச்சரின் நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு ஏற்பட்டதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டமளிப்பு விழா நடந்த கல்லூரி வளாகத்தில் ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் இயக்கப்பட்டதாகவும், ஒரு ஜெனரேட்டரிலிருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மின்சாரம் மாற்றப்பட்டபோது 5 வினாடிகள் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார்.

அதேசமயம், மின்வாரியம் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட விளக்கத்தில், "ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் உள்ள 110 KV அழகர்கோவில் - பசுமலை மின்பாதையில் இன்று காலை 11:22 மணியளவில் மின்பாதை துண்டிக்கப்பட்டதன் (jumper cut) காரணமாக மின்பாதை பழுதடைந்து மின்தடை ஏற்பட்டது. தற்போது பழுது நீக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சுமார் 2 மணி நேரத்தில் மின் விநியோகம் சீரமைக்கப்படும்." எனத் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம் மற்றும் மின் வாரியத்தின் விளக்கம் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், "மதுரையில் அரசு சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் இருக்கிறார்.. ஆனால் மின்சாரம் தான் இல்லை.. மின்சாரம் இல்லாததை விட, அதற்குப் பிறகு வந்த விளக்கங்களில் தான் மின் துறையின் பல்பே பியூஸ் ஆகிறது..

விழா ஜெனரேட்டரில்தான் நடந்தது; ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என அமைச்சர் சொல்கிறார்.. மின்வாரியத்தின் தரப்பிலோ மின் தடை என கூறப்பட்டுள்ளது.. வராத மின்சாரத்துக்கு விளக்கம் மட்டும் இரண்டு Phase-ல வருது..

ஜெனரேட்டர்தான் காரணம் என்றால் மின்வாரியம் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்? மின்வாரியத்தின் விளக்கம் சரி என்றால் அமைச்சர் சொன்ன ஜெனரேட்டர் கதை என்ன? இதற்கிடையில் மின்வாரியத்தின் பதிவு நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது..

மின்சாரம் போனதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை... மின்வாரியத்தின் பதிவு எப்படிப் போனது என்பதையாவது கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்.." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+