Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வேட்டு" வைத்த மேலிடம்.. "காலை சுத்திடுச்சே பாம்பு".. இதான் நடக்க போகுது.. "அனலில்" செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய தினம் செந்தில் பாலாஜி தரப்பிடம் ரெயிடு நடத்தப்பட்டு வரும்நிலையில், இதன் விளைவுகள் எப்படி இருக்க போகிறது? இதனால், பாஜகவுக்கு எத்தகைய நன்மை கிடைக்க போகிறது என்ற கேள்விகள் கிளம்பி உள்ளன.

திமுகவுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்த பாஜக முனைவதாக தெரிகிறது.. திமுகவுக்கு இது அதிர்ச்சி என்றாலும்கூட, இதனால், திமுகவுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் வரப்போவதில்லை..

ஒரு பலனும் இல்லை:

வெறும் ரெய்டுகளை நடத்துவதால் மட்டுமே, ஒருவரது இமேஜ் பாதிக்கப்பட போவதும் இல்லை.. அது கட்சியையும் எந்த விதத்திலும் தாக்க போவதில்லை.. சட்டப்படியான முடிவு என்ன எடுக்கப்படுகிறது? என்பதை மட்டுமே மக்கள் கவனிப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் பரவலாக கருத்து சொல்லி வருகிறார்கள்.

Senthil Balaji raid: Is BJP damaging DMK and What is bjp going to do the next

அதுமட்டுமல்ல, இப்படி ஒரு ரெயிடு நடந்ததுகூட திமுகவின் நன்மைக்கு என்றே சொல்லலாம்.. காரணம், "பாஜக - திமுக மறைமுக டீலிங்கில் உள்ளது" என்று சிலர் கிளப்பிவிட்டு வருகிறார்கள்.. அவ்வளவு ஏன், அன்று பிரதமர் மோடி சென்னை வந்தபோது, ஸ்டாலினிடமும், உதயநிதியிடமும் நெருங்கி பேசியதை வைத்து, பல்வேறு கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்பட்டன. "திமுகவின் கள்ளக்காதலி பாஜகதான்" என்று சீமான் ஓபனாகவே சொன்னாரே? இப்போது, இந்த ரெயிடு மூலம் அதுபோன்ற வதந்திகள் எல்லாம் நொறுக்கப்பட்டுள்ளன" என்றும் தங்கள் கருத்துக்களை கூறுகிறார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி:

இப்படிப்பட்ட சூழலில், மூத்த பத்திரிகையாளரும், அரசியல் திறனாய்வாளருமான ஆர்கே ராதாகிருஷ்ணன், ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், அதன் சுருக்கம்தான் இது:

"இதுபோன்ற ரெயிடுகள் எல்லாம் பெரிய தாக்கத்தை தராது.. அன்று ஜி-ஸ்கொயர் ரெய்டு நடந்ததே.. சபரீசனை என்ன செய்ய முடிந்தது? கைது செய்துவிட்டார்களா என்ன? யாராக இருந்தாலும்சரி, ஆதாரம் இருந்தால், தாராளமாக வழக்கு பதிவு செய்யட்டுமே.. விசாரணையும் செய்யட்டுமே. யார் இவர்களை தடுக்க போகிறார்கள்? இப்போதெல்லாம் ரெய்டு என்பதே கேலிக்குரியதாகிவிட்டது.. அரசியல் காழ்ப்புணர்ச்சியே தவிர வேறில்லை.

தங்க கடத்தல்:

60 வருடமாக அரசியல் செய்து வருபவரும், மூத்த தலைவரும், மாநில முதல்வருமான பினராயி விஜயனை குறி வைக்கவில்லையா? அவர்போயி தங்க கடத்தலில் இறங்குவாரா? இதே பாஜகதான் அவரிடமும் ரெய்டு நடத்தியது.. ஆனால், ஏன் பினராயை அரெஸ்ட் செய்யவில்லை? காரணம், இவர்களின் நோக்கம் எதிர்க்கட்சி தலைவர்களை டார்கெட் செய்து முடக்குவது மட்டும்தான்..

இங்கே ஒன்றை கவனித்தால் நன்றாக தெரியும்.. கர்நாடக தேர்தலுக்கு பிறகுதான், 2000 ரூபாய் விவகாரம் ஆரம்பமானது.. இப்படி ரெய்டுகள் நடக்கிறது.. செங்கோல் விவகாரம் கிளம்பி உள்ளது.. இதெல்லாம் பார்த்தால், கர்நாடக தேர்தல் தோல்வி விரக்தியின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது" என்கிறார் சீனியர் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.

Senthil Balaji raid: Is BJP damaging DMK and What is bjp going to do the next

ஷ்யாம் பேட்டி:

அதேபோல, இன்னொரு சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

குறிப்பாக, "அன்னைக்கு விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்ததே.. என் பொண்ணை ஸ்கூலுக்குகூட போக விடமாட்டேங்கறாங்க என்று மீடியா முன்னாடியே குற்றஞ்சாட்டினாரே? பங்களாவில் இருந்து கட்டுகட்டாக ஆவணங்கள், வெளிப்புறமாக தூக்கி தூக்கி போடப்பட்டதே? இதற்கு பிறகு, அனைத்து விசாரணைகளுக்கும் விஜயபாஸ்கரும் ஆஜரானாரே? அந்த விவகாரம், இப்போது என்ன ஆனது என்றே தெரியவில்லை.. அவர் மத்திய பாஜகவின் அரவணைப்பில் தற்போது உள்ளதால், இப்போதைக்கு அவர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றே நம்பலாம்.

ஆனால், இந்த ரெய்டு அப்படியில்லை.. அரசியல் நோக்கம் இதிலும் உள்ளது... இங்கே வந்து ஊழல் பட்டியலை அண்ணாமலை நீட்டுகிறாரே? கர்நாடக தேர்தல் பாஜகவுக்கு, ஒரு ஓட்டுக்கு எவ்வளவு தரப்பட்டது என்பதையும் சொல்ல வேண்டும்தானே? ஏன் சொல்லவில்லை.. செந்தில் பாலாஜியிடம் நடத்தப்படும் ரெயிடினால் கட்சிக்கு பெரிய பாதிப்பு வராது.. அமலாக்கப்பிரிவின் சம்மனில்தான்போய்தான் இது முடியும்..

காலை சுற்றின பாம்பு:

இன்னொரு சந்தேகமும் எனக்கு எழுகிறது.. கருப்பு பணத்தை ஒழிப்பதாக பாஜக அன்று சொன்னதே? அப்படியானால், செந்தில் பாலாஜியிடம் இப்போது எப்படி கருப்பு பணம் இருக்கிறது? பாஜக ஆட்சிக்கு வந்துதான் 9 வருடம் ஆகிறதே? ஏன் இதுவரை கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை? இவர்களின் நோக்கம், திமுகவை முடக்க வேண்டும் என்பதுதான்.. ஆக மொத்தத்தில், அரசியல் ரெய்டுகள் என்பது, காலை சுற்றின பாம்பு.. அது கடிக்காது.. ஆனால், அங்குமிங்கும் நகர விடாமல் தடுக்கும்" என்றார் ஷ்யாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+