1.25 வருடம் சிறைவாசம் பார்த்தவன்! சொடக்கு போட்டாங்களே.. பொறுமையா பார்ப்போம்! விளாசிய செந்தில் பாலாஜி
சென்னை: எந்த வழக்குகளுக்கும் நான் அஞ்சப்போவது இல்லை, பயந்து ஓட வேண்டிய அவசியமும் இல்லை என செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தவெக ஆசியில் பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். இதனை திசை திருப்பும் யுக்தியாகவே எங்கள் மீது தவெக அரசு வழக்குகளை போடுகிறது என திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பிறகு செந்தில் பாலாஜி பேட்டியளித்தார்.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட திமுக எம்.ல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னெல்லாம் டயலாக் பேசினார்
நான் எங்கேயும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் இங்கேதான் இருந்தேன். வழக்கறிஞர்களை சந்தித்துக்கொண்டு தான் இருந்தேன். உயர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கை தாக்கல் செய்தோம். உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தோம். வழக்கறிஞர்கள் வாதிட்டார்கள். நீதிமன்றத்தின் உரிய தீர்ப்பை பெறக்கூடிய சூழல் ஏற்பட்டது.
நாட்டில் இன்று நிறைய பிரச்சினைகள் உள்ளன. கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல, அது எப்படி ஒரு சொடக்கு போட்டு.. ஆட்சி அமைந்தால் அடுத்த நொடியே, அடுத்த நிமிடமே என்றெல்லாம் டயலாக் பேசிவிட்டு இன்றைக்கு விவசாயிகளை நடுரோட்டில் விட்டு போராடக்கூடிய சூழலை தவெக அரசு உருவாக்கியுள்ளது.
இதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் வழக்கு போடுவது, கைது பண்னுவது.. வழக்கில் தொடர்பு இல்லாதவர்களை இந்த வழக்கில் சேர்ப்பது போன்ற செயல்களில் இந்த அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. விசாரணை நடைபெற்று வருவதால் அந்த வழக்கிற்குள் நான் போக விரும்பவில்லை. விசாரணைக்கு ஆஜராகி வருகிறேன். இதெல்லாம் முழுமையாக முடியட்டும். அதன்பிறகு நான் கருத்து சொல்கிறேன்.
பயந்து ஓடக்கூடிய ஆள் கிடையாது
என்னை மட்டும் டார்க்கெட் செய்கிறார்கள் என்று இல்லை.. எல்லாருக்குமே வருது. எங்கள் முன்னள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவர்கள் என்னல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் தெரியும். நேரம் இருக்கு.. இன்னும் என்னன்னெல்லாம் செய்ய போகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை எப்படி கவனம் செலுத்த போறாங்க.. இதுபோன்ற நிகழ்வுகளில் அரசு எப்படி கவனம் செலுத்துகிறது என்று பொறுமையாக பார்ப்போம்.
ஒரு வழக்கு அல்ல.. இரண்டு வழக்கு அல்ல.. எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். நான் ஏற்கனவே, 1.25 வருடம் சிறைவாசம் பார்த்தவன். நான் அஞ்சி பயந்து ஓடக்கூடிய ஆள் கிடையாது. 30 வருடம் நான் பொதுவாழ்வில் இருந்து இருக்கிறேன். 20 வருடம் கடந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறேன். மக்கள் எனக்கு அந்த அங்கீகாரத்தை கொடுத்து இருக்கிறார்கள். அதனால் எந்த வழக்கை கண்டும் நான் அஞ்சப்போவது இல்லை. சட்டப்படி எதிர்கொள்வோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
