நம்ம செந்தில் பாலாஜியா இது.. கைவசம் துப்பாக்கி.. எவ்வளவு கடன் தெரியுமா வேட்புமனுவில் பகீர் தகவல்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. செந்தில் பாலாஜியின் வருகை கோவை அரசியலில் சூட்டை அதிகரித்துள்ளது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள வேட்புமனு தாக்கலில் தன்னிடம் ஒரு கைத்துப்பாக்கி இருப்பதாகவும், திமுக தலைமைக்கு கடன் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஏற்கனவே கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு மாற்று வேட்பாளராக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். கோவை தெற்கில் செந்தில் பாலாஜிக்கு மாற்று வேட்பாளராகவும் அசோக் தான் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

செந்தில் பாலாஜியிடம் துப்பாக்கி
செந்தில் பாலாஜி தன்னுடைய வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, அவர் விவசாயம் மற்றும் பொது சேவையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2021 தேர்தலில் அவரிடம் ரூ.97.93 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருந்தன. ரூ.1.10 கோடி அசையும் சொத்து, அவர் மனைவியின் பெயரில் ரூ.2 கோடி அசையும் சொத்து உள்ளன. செந்தில் பாலாஜியிடம் 383 கிராம் தங்கம், அவர் மனைவியிடம் 1,019 கிராம் தங்கம் இருக்கிறது.
ரூ.9.35 லட்சம் கடன்
ரூ.9.05 லட்சம் வங்கிக் கடன் இருக்கிறது. தற்போது ரூ.1.35 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. மேலும். ரூ.85,000 மதிப்பில் ஒரு கைத்துப்பாக்கி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் மீது 12 வழக்குகள் உள்ளன. கடந்த 2021 தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டபோது தேர்தல் செலவுகளுக்காக திமுக கட்சித் தலைமை வழங்கிய தொகையில், செலவுகள் போக ரூ.9.35 லட்சம் கடனை திமுகவுக்கு கொடுக்க வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.
தம்பி அசோக்கின் சொத்து
ரூ.24.65 லட்சம் வருமான வரி பாக்கி இருப்பதாகவும், வரி விதிப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருப்பதாக சொல்லியுள்ளார். கரூர் அரசு கல்லூரியில் பி.காம் 3 ஆம் ஆண்டு பாதியில் நிறுத்தியுள்ளார். செந்தில் பாலாஜியிடம் 2 கார்கள், ஒரு டெம்போ, மனைவியிடம் ஒரு ஸ்கூட்டர் உள்ளது. அசோக் பெயரில் 7 கார்கள், 1 ஜீப், 1 டிரக், 2 ஸ்கூட்டர், 1,771 கிராம் தங்கம் உள்ளதாகவும் ரூ.2.2 கோடி அசையா சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications