கரூர் விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டலா?.. செந்தில் பாலாஜி பரபரப்பு விளக்கம்!
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். செந்தில் பாலாஜி தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என்ற எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இதற்கு செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
திமுகவின் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கோவை தொழில்துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களிடம் கலந்தாலோசித்துள்ளோம். திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம். ரூ.1 லட்சம் கோடியில் கோவை மாவட்டத்திற்கு அடுத்த 5 வருடங்களில் செய்யவுள்ள பணிகள் குறித்த வரைவு திட்டம் வெளியிடுகிறோம்.

கோவை முதலிடம்
தொழில்துறை விரிவாக்கத்திற்காக ரூ.50,000 கோடி, உள்கட்டமைப்பு மேம்படுத்த ரூ. 50,000 கோடிக்கு திட்டங்கள் செயல்படுத்துவோம். ஜவுளித்துறையில் புதிய முதலீடுகள், சிறு, குறு தொழில்துறையை மேம்படுத்த உற்பத்தி பொருட்கள் தயாரிப்பு திட்டம், தகவல் தொழில்நுட்ப தலைநகராக மாற்ற முயற்சி ஆகியவை பரிசீலனையில் உள்ளன. பல்வேறு திட்டங்கள் மூலம் அடுத்த 10 வருடங்களில் கோவையை தமிழகத்தில் முதலிடத்திற்கு மேம்படுத்த திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்த கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முயற்சிப்போம். கிழக்கு புறநகர்ச்சாலைப்பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். முந்தைய ஆட்சியாளர்கள் இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தியிருக்க மாட்டார்கள். வெள்ளலூர் குப்பைக்கிடங்கு தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்போம்.
தோல்வி பயம்
தேர்தல் தோல்வி பயம் காரணமாக கோவையில் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை உருவாக்குகின்றனர். கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு வெளிமாநில முதலமைச்சர்களும், நிர்வாகிகளும் வந்து பிரச்சாரம் செய்கிறார்கள்ள. தோல்வி என்பதை உணர்ந்த அதிமுக வேட்பாளர் பேசிவருகிறார். தோற்கப்போகிறவர்கள் இது போன்று பிரச்சனைகளை முன்னெடுக்கிறார்கள். அதிமுகவினர் என்ன கொடுத்துள்ளார்கள் என்பதை சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது.
வாட்ஸ் அப் பில் கேட்டால் அண்ணாமலை துண்டு சீட்டை கொடுத்தவர். இன்று பல கோடி ரூபாய் வருமானம் உள்ளவருக்கு எப்படி இந்த பணம் வந்தது. உரக்கப்பேசினால் உண்மையாகிவிடும் என நினைக்கிறார். சுமார் 30 வருடங்களாக நான் அரசியலில் இருக்கிறேன். சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்களில் ரூ.21 கோடி ரூபாயை கோவைக்கு கொடுத்த ஒரே அரசு திமுக. இதுவரை வேறு யாரும் கொடுக்கவில்லை.
விஜயபாஸ்கருக்கு பதில்
விஜயபாஸ்கருக்கு நான் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். நான் கோவையில் இருக்கிறேன். எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இருக்கிறார். அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கிக் கொள்ளட்டும். நான் எப்படி அவருக்கு தீங்கு ஏற்படுத்த முடியும். தேர்தலின் போது, மத்திய, மாநில அரசு ஊழியர்களாக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள்.
எப்படி வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முடியும். தேர்தலுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் இரண்டுமே தவறு. பணம் கொடுப்பதாக ஆதாரங்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும். ஒரு எதிர்க்கட்சி தலைவர் தேர்தல் காலத்தில் பேசக்கூடிய வார்த்தைகளுக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் பல்வேறு விமர்சனங்களை அவர் வைத்து வருகிறார். தேர்தல் முடியும் வரை சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது" என்றார்.













Click it and Unblock the Notifications