Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். கரூரில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட செந்தில் பாலாஜி கோவைக்கு மாறி இருக்கும் தகவல் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் கரூரில் போட்டியிட்டால் சிக்கல் வர வாய்ப்புள்ளதாக தெரிந்து தான் செந்தில் பாலாஜி கோவைக்கு தாவி விட்டதாகவும், இதனால் கரூர் விஜயபாஸ்கரின் ரூட் கிளியர் ஆகிவிட்டதாக சொல்கின்றனர் அதிமுகவினர்.
மேலும், செ.பா கோவையில் கவனம் செலுத்துவதால் கரூரில் 4 தொகுதிகளும் அதிமுகவுக்கு தன் என அடித்துச் சொல்கின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

Senthil Balaji

இந்த முறை சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. அதாவது, திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, தமிழக வெற்றிக் மற்றும் நாம் தமிழர் ஆகியவை தனித்தனியாக களமிறங்குவதால் தேர்தல் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக வேட்பாளர் பட்டியல்

இந்த தேர்தலில் திமுக மொத்தம் 164 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 70 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது திமுக நேரடியாக போட்டியிடும் 164 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் பல முக்கிய தலைவர்கள் தங்களது சொந்த தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகின்றனர். அதன்படி, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் களம் காண்கிறார். அதேபோல், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

செந்தில் பாலாஜி

மேலும், காட்பாடி தொகுதியில் மூத்த தலைவர் துரைமுருகன் மீண்டும் களம் காண்கிறார். ஆனால் கடந்த முறை கரூரில் வென்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் என்றாலே செந்தில் பாலாஜி என திமுகவினர் பேசி வந்த நிலையில் அவரது இந்த திடீர் முடிவு கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் கொங்கு மண்டல பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜி, எஸ்பி வேலுமணியை நேரடியாக எதிர் கொள்ளும் வகையில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்குகிறார் என ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர்.

திமுக

உண்மையில் கரூரில் அடுத்தடுத்து பல சிக்கல்களும் நெருக்கடியும் வந்ததால் செந்தில் பாலாஜி கோவைக்கு தாவி விட்டதாக சில காரணங்களை முன்வைக்கின்றனர் திமுகவினர். குறிப்பாக கரூரில் மணல் அள்ளும் விவகாரம், வெண்ணெய்மலை கோவில் ஆக்கிரமிப்பு விவகாரங்களை செந்தில் பாலாஜிக்கு எதிராக அந்த ஊர் மக்களை போராட்டத்தில் குதித்தனர். போதாக்குறைக்கு கரூர் நெரிசல் விவகாரமும் சேர்ந்து கொள்ள செந்தில் பாலாஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தது.

கரூர்

மேலும் ஐந்து ஆண்டுகளில் கரூர் பக்கம் எட்டிப் பார்க்காத செந்தில் பாலாஜி கோவை ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தனது கவனத்தை செலுத்தி வந்தார். கோவையில் அவர் போட்டியிடப் போவதாக கடந்த சில மாதங்களாகவே அறிகுறிகள் தென்படத் தொடங்கிய நிலையில், கரூரில் உள்ள அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். அதே நேரத்தில் கரூரிலிருந்து செந்தில் பாலாஜி கோவைக்கு வந்ததால் கோவை நிர்வாகிகளும் தங்கள் வாய்ப்பு பறிபோய் விட்டதாக சோகத்தில் இருந்தனர்.

எம்ஆர் விஜயபாஸ்கர்

இப்படி பல பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சிறையில் இருந்தது உள்ளிட்ட பல விவகாரங்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக திரும்பியதால் தான் கோவைக்கு ஜாகையை மாற்றிவிட்டார் என்கின்றனர். அதே நேரத்தில் போட்டியிடாமலேயே தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என கூறி வருகிறது. கரூர் எம்ஆர் விஜயபாஸ்கர் தரப்பு 5 ஆண்டுகளில் செந்தில் பாலாஜிக்கு எதிரான மனநிலை, மணல் எடுக்கும், விவகாரம் கரூர் வெண்ணைமலை கோவில் விவகாரம் ஆகியவற்றில் அதிமுக களத்தில் இறங்கி போராடியது.

அதிமுக நம்பிக்கை

மேலும், கோவையில் கவனம் செலுத்திய செந்தில் பாலாஜி கரூர் கரூரை கண்டுகொள்ளவில்லை. இதுவும் அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது தற்போது தேர்தலில் முழுக்க முழுக்க தனது கவனத்தை செந்தில் பாலாஜி கோவைக்கு தான் செலுத்துவார் கரூரில் அவரது சிஷ்யர்களை நிறுத்தினாலும் அதிமுக முன்னாள் ஈடு கொடுக்க முடியாது ஆட்சிக்கு எதிரான மனநிலையும் விஜயபாஸ்கருக்கு ஆதரவான மனநிலையும் அதிமுகவின் கோட்டையாக கரூரை மாற்றும் என அடித்துச் சொல்கின்றனர். என்ன நடக்கும்? என்பதை தேர்தல் முடிவுகள் வரும் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+