செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து நெஞ்சு வலி வருகிறது.. எய்ம்ஸில் அட்மிட் பண்ணுங்க! நாராயணன் திருப்பதி
சென்னை: பலமுறை அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சையளித்தும் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி வருவது கவலையளிக்கிறது. அதனால் தமிழக முதல்வர் அவர் மீது கருணை கொண்டு உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து செந்தில் பாலாஜியின் உடல்நலம் காக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே நேற்று முன் தினம் மதியம் செந்தில் பாலாஜிக்கு திடீரென மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இதயவியல் துறை மருத்துவர்கள் சோதனை நடத்தினர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை AIIMS மருத்துவமணையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்துவதாக பாஜகவின் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 'திடீர்' நெஞ்சுவலி ஏற்பட்டு முதலில் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியூட்டக் கூடிய வருத்தத்தையும், வியப்பையும் அளிக்கிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று (ஜூலை 22) முதன்மை நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவிற்கு நேரில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பலமுறை நம் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சையளித்தும் தொடர்ந்து செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெஞ்சு வலி வருவது கவலையளிக்கிறது.
அதனால் தமிழக முதல்வர் அவர் மீது கருணை கொண்டு உடனடியாக டில்லி AIIMS மருத்துவமனையில் அனுமதித்து செந்தில் பாலாஜியின் உடல்நலம் காக்க வேண்டும். ஒரு வேளை, அவ்வளவு தூரம் பயணிக்க முடியாதென்றால், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலாவது அவரை அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் அவரின் 'சேவை' இந்த நாட்டிற்கு 'தேவை' என்பதை முதல்வர் புரிந்து கொண்டு அவரை கனிவோடு AIIMS மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார்












Click it and Unblock the Notifications