டாஸ்மாக் நோ – வெயிட்டான துறைக்கு குறிவைத்த செந்தில் பாலாஜி.. அலறும் சீனியர்கள்
சென்னை: பதவி வருவதும் போவதும் அரசியலில் சாதாரணம். செந்தில் பாலாஜி ஒவ்வொரு முறை சரிவை சந்தித்து வரும்போது, முன்பைவிட பெரிய உயரத்துக்கு டார்கெட் செய்வார். அந்த வகையில் அமைச்சரவை மாற்றத்தில், செந்தில் பாலாஜிக்கு எந்தத் துறை வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தலைமையில் இருந்து வரும் சில தகவல்கள் சீனியர்களை அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளன.
471 நாட்கள் சிறை வாசத்தில் இருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது என்ற தகவல் தீயாய் பரவியது. செந்தில் பாலாஜி வருகைக்காக தான் திமுக தலைமை காத்திருந்ததாக தகவல் வெளியானது. தற்போது செந்தில் பாலாஜி வந்துவிட்டார்.

அமைச்சரவை மாற்றத்துக்கு திமுக தேதி குறித்துவிட்டது. ஆளுநர் மாளிகையில் கடிதமும் வழங்கியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை மாற்றம் குறித்து தகவல் வெளியாக வாய்ப்புள்ளது. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். ஆனால் ஏமாற்றம் இருக்காது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் அதில் என்ன மாற்றங்கள் இருக்கப் போகிறது என்ற தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி, உயர் கல்வித்துறைக்கு பட்டியிலனத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு என்று பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் செந்தில் பாலாஜி குறித்தும் ஏராளமான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. செந்தில் பாலாஜியிடம் முன்பிருந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
தங்கம் தென்னரசு ஏற்கனவே நிதித்துறையை கவனிக்கிறார். முத்துசாமிக்கும் மதுவிலக்கு வேண்டாம் என்று சொல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்த இரண்டு துறைகளிலும் மாற்றம் ஏற்படுவது உறுதி. இருப்பினும் அவை செந்தில் பாலாஜிக்கு தான் செல்கிறதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜி அரசியலில் சில மாற்றங்கள் இருக்கும் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் அவர் கடந்த காலத்தை போல சர்ச்சைகளில் சிக்கக் கூடாது என்ற மனநிலையில் இருக்கிறாராம். டாஸ்மாக் துறையில் தான் செந்தில் பாலாஜி மீது ஏராளமான விமர்சனங்கள் வந்தன. இதனால் இந்தமுறை மதுவிலக்கு துறை வேண்டாம் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளாராம். அதேபோல மின்சாரத்துறையிலும் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. இந்த நேரத்தில் செந்தில் பாலாஜியிடம் சென்றால், தேவையில்லாத பிரச்னைகள் வரும் என அதிகாரிகள் கூறியுள்ளார்களாம்.
இருப்பினும் மின்சாரத்துறை மீண்டும் செந்தில் பாலாஜிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அதேநேரத்தில் செந்தில் பாலாஜியின் கணக்கு வேறு வகையில் உள்ளதாம். கரூர் மாவட்டத்துடன் கோவை மாவட்டத்தையும் கவனிக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு அவருக்கு செல்லும். அப்போது வளமான ஒரு துறை இருப்பது அவசியம். இதனால் செந்தில் பாலாஜி தரப்பில் பொதுப்பணித்துறைக்கு ஆர்வம் தெரிவித்து தலைமையில் காய் நகர்த்தியுள்ளார்களாம். ஆனால் பவர்புல்லான துறை என்பதில் செந்தில் பாலாஜி உறுதியாக இருக்கிறாராம்.
இதனால் சீனியர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்துக்கு என்ன நடந்தாலும் ஆச்சரியமில்லை என்றும் கூறுகின்றனர். டாஸ்மாக்கை பொறுத்தவரை முத்துசாமி வந்த பிறகு பெரிதாக சர்ச்சை ஆகவில்லை. அதனால் அந்தத் துறையை முத்துசாமியிடம் தொடரவும் வாய்ப்புள்ளது. எப்படியும் உதயநிதி துணை முதல்வர் ஆகப்போவது உறுதி. இதையொட்டி சீனியர்களின் இலாகவில் மாற்றம் இருப்பது உறுதி என்கின்றனர் திமுகவினர்.












Click it and Unblock the Notifications