கேஸ் சிபிஐ கைக்கு போயிருச்சு! 397 கோடிக்கு ட்ரான்ஸ்பார்மர் ஊழல் புகார்! செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!
சென்னை: தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் அணியின் துணைச் செயலாளர் சரவணன் மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ.397 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சார உற்பத்தி மற்றும் விநியோக நிறுவன தலைசர் டான்ஜெட்கோ தலைவா் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகிக்கத்தக்க ஆதாரங்கள் உள்ளதாக சரவணன் மற்றும் அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்தனர்.

மனுவில், மின் மாற்றிகள் கொள்முதல் டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் அரசுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டான்ஜெட்கோ தரப்பில், ஒவ்வொரு மின் மாற்றியும் குறைந்த விலையில் வாங்கப்பட்டதாகவும், ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விலை குறைத்து கொள்முதல் செய்ததால் அரசுக்கு பணச் சேமிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என அவர்கள் வாதிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஊழல் தடுப்பு துறை தரப்பில் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்பதால் புகாரை முடித்து வைத்ததாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மின் மாற்றிகள் கொள்முதல் டெண்டரில் பலர் ஒரே விலையை குறிப்பிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வாதிட்டார். மேலும், 2023ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரில் ஆரம்ப கட்ட விசாரணையில் சந்தேகங்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் புகாரை முடித்து வைத்தது சரியான நடைமுறை அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்புகளின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை வெளியிடப்பட்ட தீர்ப்பில், வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இரண்டு வாரங்களுக்குள் சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழக ஊழல் தடுப்பு துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications