உதயநிதி கைதை! திருவல்லிக்கேணி ஸ்டேஷனில் லைவ்வாக செல்போனில் பார்த்த செந்தில் பாலாஜி அப்செட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தபோது உதயநிதி கைதை லைவ்வாக யூடியூப்பில் பார்த்து செந்தில் பாலாஜியும் அசோக் குமாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூரில் தவெக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர் தவெக அரசுக்கு கவலை என்னவென்றால் திமுகவை எப்படியாவது முடக்கி வேண்டும் என்பதுதான்! என உதயநிதி பேசிக் கொண்டிருந்தார்.

Senthil Balaji

அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள் திரிஷா, திரிஷா என கத்தினர். உடனே உதயநிதி இரட்டை அர்த்தத்தில் திரிஷாவை அவதூறாக குறிப்பிடும் வார்த்தையை சொன்னார். இதற்கு திமுக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

உதயநிதியின் இந்த பேச்சுக்கு பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்தனர். உதயநிதி மீது தஞ்சை தவெக மகளிரணியினர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை நீலாங்கரையில் உதயநிதியின் வீட்டில் போலீஸார் குவிந்தனர்.

அப்போது அவரை கைது செய்ய வந்துள்ளதாக உதய் மனைவி கிருத்திகாவிடம் உயரதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கிருத்திக, அவர் குளித்துக் கொண்டிருக்கிறார், பொறுமையாக இருங்கள் என்றார்.

இந்த தகவலறிந்து முன்னாள் அமைச்சர்கல் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் நீலாங்கரை வீட்டிற்கு வந்துவிட்டனர். அங்கு அவர்களும் போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் காவல் துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உதயநிதியை கைது செய்து காவல் வாகனத்திலேயே தஞ்சாவூருக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் தமிழகத்தில் பரபரப்பான சூழல் எழுந்துள்ளது. உதயநிதி கைதை கண்டித்து தமிழகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த கைது குறித்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் மீது கைது நடவடிக்கையை நான் காமெடியாக பார்க்கிறேன். நான் பேசாத ஒரு விஷயத்திற்காக என்னை கைது செய்துள்ளனர். எந்த பிரச்சினையையும் நான் சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.

வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் உதயநிதி, வேன் ஜன்னலை திறந்தபடியே சிரித்துக் கொண்டே திமுகவினரை நோக்கி கையசைத்தப்படி செல்கிறார்.

இந்த நிலையில் தவெக அரசை கவிழ்க்க சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளியே இருக்கும் செந்தில் பாலாஜியும் அசோக் குமாரும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அப்போது அவர்கள் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்த போது உதயநிதி கைது செய்யப்படுவது குறித்து லைவ் வீடியோவில் பார்த்த செந்தில் பாலாஜியும் அசோக் குமாரும் கவலை அடைந்தனர். ஒரு கட்டத்தில் செந்தில் பாலாஜி தலையில் கைவைத்துக் கொண்டு மிகவும் அப்செட்டாகி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார்.

நாளை சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில் உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே நேரம் உதயநிதியின் பேச்சுக்கும் கண்டனங்களை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+