3 முறை சம்மன்.. செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்கின் வழக்கறிஞர் ஐடி முன் ஆஜராகி விளக்கம்
சென்னை: செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் நெரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், அசோக் குமார் இதுவரை ஆஜராகவில்லை. இந்த நிலையில், அவரது வழக்கறிஞர் வருமான வரித்துறை முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மே மாதம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சென்னை, கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் மொத்தம் 40-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. கரூரில் அசோக் வீட்டில் சோதனை நடத்த சென்றவர்களை அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்து தாக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அசோக் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். ஒருவாரத்திற்கும் மேலாக இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் கட்டுக்கட்டாக பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அசோக்கிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக 2 முறை அசோக்கிற்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அசோக் அதனை கண்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். மேலும் அவர் எங்கு இருக்கிறார்? என்ற தகவலும் தெரியாத நிலை உள்ளது
இதன் தொடர்ச்சியாக வருமான வரித்துறை சார்பில் அசோக்கிற்கு 3-வது முறையாக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் வரும் 27 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த முறையும் அசோக் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கையை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அசோக் குமார் தரப்பில் அவரது வழக்கறிஞர் வருமான வரித்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்ததாகவும் அசோக் குமார் விரைவில் வருமான வரித்துறை முன்பாக ஆஜராக உள்ளதாகவும் உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு அசோக்குமார் ஆஜராகாத நிலையில், அவர் தரப்பில் வக்கீல் ஆஜராகியுள்ளார் .
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications