ஜிவி பிரகாஷ், தனுஷ், சமந்தா! கோலிவுட்டில் அதிகரித்த விவாகரத்து! எல்லாத்தையும் இணைக்கும் ஒற்றை புள்ளி
சென்னை: ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து தமிழ் சினிமா உலகை உலுக்கி உள்ளது. கோலிவுட் உலகில் திடீரென அதிகரித்து வரும் விவாகரத்துகள் மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன.
இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவரது மனைவி சைந்தவியும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இருவரும் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு தங்கள் முடிவை ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.

விவாகரத்து: பல கட்ட யோசனைகளுக்குப் பிறகு, திருமணமான 11 ஆண்டுகளுக்குப் பிறகு சைந்தவியும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என்று இருவரும் அந்த அறிக்கையில் தெரிவித்தனர். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இந்த தனிப்பட்ட முடிவின் போது எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பிரிந்து வாழ போகிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, இது ஒருவருக்கொருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவு நிறைய பலம் கொடுக்கிறது. நன்றி.
குழந்தை: ஆஸ்கார் விருது பெற்ற இசைக்கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகன் ஜி.வி.பிரகாஷ் குமார், 2013ல் தனது பள்ளி பருவ காதலியான சைந்தவியை மணந்தார். சைந்தவி பின்னணிப் பாடகி. அவர்களுக்கு 2020 இல் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
பலர் விவாகரத்து: ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து தமிழ் சினிமா உலகை உலுக்கி உள்ளது.இவர்கள் மட்டுமின்றி சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா , சமந்தா - அக்கினேனி, ஷீலா - ராஜ்குமார் , விஷ்ணு விஷால் - ரஜினி உட்பட பலர் விவாகரத்து செய்து கொண்டனர். இன்னும் சிலர் விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.
காரணம் என்ன: கோலிவுட்டில் உலகில் திடீரென அதிகரித்து வரும் இது போன்ற விவாகரத்துகளுக்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
1. கோலிவுட் உலகில் ஓபன் ரிலேஷன்ஷிப் டிரெண்டாக தொடங்கி உள்ளது. ஒரே நேரத்தில் பல ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் முறை இயல்பாக தொடங்கி உள்ளது. இதில் இணையர்களில் ஒருவருக்கு ஓபன் ரிலேஷன்ஷிப் விருப்பம் இல்லாத பட்சத்தில் அவர்கள் பிரியும் நிலை ஏற்படுகிறது.
2. பலர் சினிமாவில் பெரிய ஆள் ஆகும் முன்பே சிறு வயதிலேயே திருமணம் செய்து விடுகிறார்கள். அதன்பின் பின் அவர்கள் துறையில் வளர்ந்ததும் புது புது ஆட்களை பார்க்கும் போது ஏற்கனவே இருக்கும் திருமண வாழ்க்கை கசந்து விடுகிறது.
3. அதேபோல் சினிமாவில் வளரும் முன்பே திருமணம் செய்தவர்கள் வளர்ந்த பின் குணாதிசய ரீதியாக மாறுவது உண்டு. இந்த மாற்றத்தை இணையர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போவதும் கூட சண்டைக்கு வழிவகுக்கும்.
4. சினிமா உலகில் கிசுகிசுக்கள் சாதாரணம். இதை சிலர் இயல்பாக எடுத்துக்கொள்வது உண்டு. சிலர் வாழ்க்கையில் இது போன்ற கிசுகிசுக்கள் மோதலுக்கு வழிவகுத்து பிரிவை ஏற்படுத்தும்.
5. கோலிவுட் நடிகர், நடிகைகள் திருமண வாழ்க்கை தாண்டி கூடுதல் உறவை வைத்துக்கொள்ளும் இயல்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதுவும் கூட திருமணங்கள் முறிய முக்கிய காரணம் ஆகிவிட்டது.












Click it and Unblock the Notifications