2007ஆம் ஆண்டு செப். 23ஆம் தேதி! பாஜக கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்திய ஜெ.அன்பழகன்! மறக்க முடியுமா?
சென்னை: கொரோனா காரணமாக ஜெ.அன்பழகன் மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு கமலாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன் பாஜக கொடிக்கம்பத்தை அவர் வெட்டி வீழ்த்திய நிகழ்வும் நடந்தது.
கட்சிப்பணி என்று வந்துவிட்டால் சாப்பாடு -தூக்கம் -மருந்து மாத்திரை -உடல்நலம் -குடும்பம் என எதை பற்றியும் கவலை கொள்ளாமல் முழு ஈடுபாட்டுடன் களமாடியவர் ஜெ.அன்பழகன். இதனால் தான் இவரது இறுதி மூச்சு வரை திமுக தலைமையிடம் நேருக்கு நேர் விவாதிக்க கூடிய இடத்தில் இருந்தார்.

மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கூட ஐ பேக் டீமை ஸ்டாலினிடம் நேரடியாக வறுத்தெடுத்தவர் ஜெ.அன்பழகன். கட்சிப்பணிகளில் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும், விளையாட்டு போட்டிகளை பார்க்காமலோ, சினிமாவை பற்றி விவாதிக்காமலோ அவர் இருந்ததில்லை.
இதனிடையே சேது சமுத்திர திட்டம் விவகாரத்தில் ராமர் குறித்து கருணாநிதி தெரிவித்த ஒரு கருத்துக்கு, ராம்விலாஸ் வேதாந்தி என்ற பாஜக ஆதரவு சாமியார் கண்டனம் தெரிவித்திருந்ததுடன் கருணாநிதியின் தலையை சீவி வந்தால் தங்கம் பரிசாக கொடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனால் வெகுந்டெழுந்த ஜெ.அன்பழகன், தனது படை பரிவாரங்களுடன் கமலாலயத்தில் போராட்டம் நடத்தியதுடன் அங்கிருந்த பாஜக கொடிக்கம்பத்தையும் வெட்டி சாய்த்த நிகழ்வு நடந்தது. இது குறித்து ஒன் இந்தியா தமிழிடம் கூறிய மறைந்த ஜெ.அன்பழகனுக்கு நெருக்கமான ஜானகிராமன்,
''2007ஆம் செப்டம்பர் 23ஆம் தேதி தான் பாஜக கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்திய நிகழ்வு நடந்தது. நானும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டேன். அப்போது திமுக ஆட்சி நடந்தாலும் கூட பாரபட்சமின்றி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது'', என்ற நினைவலைகளை பகிர்ந்தார்.
''நான் மறைந்தாலும் கழகத்தின் கொள்கைகளை காக்கும் சின்னமாக விளங்குவேன்'' என கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தனது சகோதரர் மகள் திருமண விழாவில் பேசியிருந்தார் ஜெ.அன்பழகன். அதனை இப்போது சுட்டிக்காட்டும் அவரது ஆதரவாளர்கள் ஜெ.அன்பழகன் மறைவை ஈடுசெய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
-
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி












Click it and Unblock the Notifications