September matha rasi palan / செப்டம்பர் மாத ராசி பலன்கள் 2020: நான்கு ராசிக்காரர்களுக்கு யோகம்

செப்டம்பர் மாதம் கிரகங்களின் சஞ்சாரம், கிரகங்களின் கூட்டணியைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் மாதம் சூரியன் சிம்மம் ராசியில் பாதி நாட்களும் கன்னி ராசியில் 15 தினமும் சஞ்சரிப்பார். சூரியனுடன் புதன் கூட்டணி இந்த மாதமும் நீடிக்கிறது. இதனால் புத ஆதிபத்ய யோகமும் உண்டாகிறது. சுக்கிரன் செவ்வாய் பார்வை கிடைக்கிறது. ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் கூட்டணிகளால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் மேஷ ராசியில் உள்ள செவ்வாய் வக்ரமடைகிறார். தனுசு ராசியில் உள்ள குரு பகவான் வக்ரம் முடிகிறது. 16ஆம் தேதியன்று சூரியன் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 22ஆம் தேதி துலாம் ராசிக்கு இடம்பெயர்கிறார். செப்டம்பர் 23ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. ராகு ரிஷபம் ராசிக்கும் கேது விருச்சிகம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கும் திடீர் யோகங்களும், அதிர்ஷ்டங்களும் தேடி வரப்போகிறது.

தனுசு

தனுசு

ராசிநாதன் குரு உங்க ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது சிறப்பு. இந்த மாதத்தில் அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. ஆறில் ராகு,12ல் கேது பலமான யோகத்தை கொடுப்பார்கள். நல்ல காரியம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். குரு உங்க ராசிக்கு சுக ஸ்தான அதிபதியும் அவர்தான். இதுநாள் வரை வக்ரமடைந்து பின்னோக்கி சென்ற குரு வக்ர நிவர்த்தி அடைந்து நல்ல பலத்தோடு அமர்வது உங்களுக்கு சிறப்பு. உங்களுடைய முயற்சிகள் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை தொடர்பாக நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை தொடங்கலாம். படிப்பு தொடர்பாக மாணவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. உங்களின் திறமை வெளிப்படும். சனி இரண்டாம் வீட்டில் இருப்பதால் நீங்கள் தெளிவாக பேசுங்கள். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம் நிறைவேற்ற முடியாமல் போய்விடும். கோபத்தோடும் வேகத்தோடும் பேச வேண்டாம். சுக்கிரன் எட்டாம் வீட்டில் மறைந்திருப்பதால் பணம் நகைகளை பத்திரமாக வைத்திருங்கள். பணவரவு அதிகம் வரும் கூடவே சுப விரைய செலவுகளும் வரும்.

மகரம்

மகரம்

சூரியன் எட்டில் இருந்து மறைந்திருப்பது விபரீத ராஜயோகம். மாத பிற்பகுதியில் சூரியன் ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் சுக்கிரன் பார்வை உங்க ராசிக்கு நேராக விழுகிறது. சனி மீது சுக்கிரன் பார்வை விழுகிறது. உங்களுக்கு அபரிமிதமான யோகம் கிடைக்கும். உங்களின் திறமை பட்டத்தீட்டப்படும். நம்பிக்கை அதிகரிக்கும். வேலை கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். வேலையை உற்சாகமாக செய்வீர்கள். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். உச்சம் பெற்ற புதன் உங்களுக்கு சௌபாக்கியத்தை அதிகரிப்பார். உங்க கவுரவம் கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். காதல் மனநிலையில் இருப்பவர்களுக்கு கல்யாண யோகம் கைகூடி வருகிறது. வீட்டில் சுப காரியம் நடைபெறும். ஆட்சி பெற்ற செவ்வாய் அற்புத பலன்களை தரப்போகிறார். உங்களின் வருமானம் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் உள்ள கேதுவினால் நன்மை நடைபெறும். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும்.
மாணவர்களின் நிலையை பார்த்தால் கல்வியில் பிடித்த துறையை தேர்வு செய்து படிப்பீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் யோகம் கைகூடி வருகிறது. கடன் பிரச்சினை நீங்கும். வீடு சொத்து வாங்குவது தொடர்பாக சுப விரைய செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் நன்றாக உள்ளது. சூரியன் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். உணவு விசயத்தில் கவனமாக இருங்க. சுக்கிரன் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்க ராசிக்கு சில சங்கடங்கள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. செவ்வாய் மூன்றில் ஆட்சி பெற்றிருக்கிறார். தைரியம் அதிகரிக்கும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்காத இடமாற்றம் மனதில் சில குழப்பத்தை ஏற்படுத்தும். விரைய சனி சில சுப விரையங்களை ஏற்படுத்துவார். பண வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். பயணங்களில் அலைச்சல் வரும் கவனம் தேவை. மறைந்த புதன் சில வித்தைகளை கற்றுக்கொடுப்பார். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். இந்த மாதம் சொத்துக்களை வாங்க வேண்டாம் ஒத்திப்போடுங்க. ராகு கேது பெயர்ச்சி நான்கில் ராகு, பத்தில் கேது என சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம். வேலையில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. வியாபாரம் செய்பவர்கள் லாபத்தை மட்டும் கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். திருமண முயற்சிகளில் தடை வந்து பின்னர் வெற்றிகரமாக நடைபெறும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகரமான மாதமாக அமையப்போகிறது. இதுநாள்வரை இருந்த தடைகள் இனி தவிடுபொடியாகும். சூரியன் ஆறாம் வீட்டில் மறைந்திருந்தாலும் மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு நகர்ந்து உச்சம் பெற்ற புதனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்க வாக்கு பலமடையும். நீங்க சொன்னதை செய்து காட்டக்கூடிய தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். குரு உங்க ராசி அதிபதி உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார், புதன் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் புது உற்சாகம் பிறக்கும். இந்த மாதம் குருவும், புதனும் கேந்திர ஸ்தானத்தில் யோகம் பெற்று அமர்ந்துள்ளனர். மாணவர்கள் படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமைகள் வெளிப்படும் சுப பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் நல்ல விசயங்கள் நடக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள், தேவைகளை நிறைவேற்றுவீர்கள். படிப்பு தொடர்பாக மாணவர்கள் திட்டமிடுவது வெற்றிகரமாக முடியும். திருமணம் சுப காரிய பேச்சுவார்கள் இந்த மாதம் வெற்றிகரமாக முடியும். லாப ஸ்தானத்தில் சனி, மூன்றில் ராகு, ஒன்பதில் கேது என கிரகங்கள் சாதகமாக இருந்து ஆதாயத்தை கொடுக்கும். களஸ்திர ஸ்தான அதிபதி புதன் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. நல்ல வரன் அமையும். மொத்தத்தில் உங்களுக்கு செப்டம்பர் மாதம் சந்தோஷங்களை கொடுக்கக்கூடிய மாதமாக அமையப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+